தனியார் சேனலில் விஜேவாக கேரியரை தொடங்கியவர் அஞ்சனா. பல ஆண்டுகள் மியூசிக் சேனலில் விஜேவாக பணிபுரிந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் பல இசை வெளியிட்டு விழா மற்றும் சினிமா தொடர்பான விழாக்கள் உட்பட கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜே அஞ்சனாவிற்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேல் பாலோவர்ஸ் உள்ளனர். பின்னர் கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஞ்சனா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.


இந்நிலையில், அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிட்டும் வரும் அஞ்சனா, தோசை மாவை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தும் டிப்ஸை பகிர்ந்திருக்கிறார். வீட்டில் சமையலுக்காக பயன்படுத்தப்படும் தோசை மாவு மீதமானால், அதை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார். தோசை மாவை முகத்தில் தேய்த்து 10 நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால், முகம் பளபளப்பாக இருக்கும் என அவர் டிப்ஸ் வழங்கி இருக்கிறார்.


வீடியோவைக் காண:







அஞ்சனா தற்போது மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சண்டே கொண்டாட்டம் என்ற ஷோவையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண