துணை நடிகையாக மட்டுமே நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. ஆனாலும், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். முதல் படத்திலேயே துணை நடிகை என்பதால் தொடர்ந்து தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. துணை நடிகையாக நடித்து வரும் இவர் தன்னை இன்னும் உயர்த்திக்கொள்ள ஃபோட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதோடு அவர் ஆடும் பப் டான்ஸுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.



பட வாய்ப்புகளுக்காக தான் அவர் இது போன்ற புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வந்தார். ஷாலு ஷம்மு முதலில் நடித்த இரண்டு படத்திலும் கிராமத்து பெண்ணாக தெரிந்தார், ஆனால் இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அவர் மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருவதுதான். இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்கிறது. அதேபோல் தவறாக யார் விமர்சனம் செய்தாலும் தட்டிவிட்டு செல்லும் இவர், இறுதியாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக வந்த ”இரண்டாம் குத்து ” படத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.






அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி ‘ பாடலை விட சமந்தா ஆடிய 'ஊ சொல்றியா’ பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும், திரையரங்கில் இந்த பாடலை ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் ஷாலு ஷம்மு. அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.