பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ரமலான் வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது வீட்டின் முன் கூடியிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


ஷாருக்கான்


பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் நடிகர் ஷாருக்கான். கடந்த ஆண்டு பதான், ஜவான் மற்றும் டங்கி என ஒரே வருடத்தில் ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்தார். இதில் பதான் மற்றும் ஜவான் 1000 கோடிக வசூலும், டங்கி படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் செய்தது. எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் ரசிகர்களுடன் சாமானியனான உரையாடக்கூடிய அவருடைய இயல்பே கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்புக்கான காரணமாக இருக்கிறது.

தனது 30 ஆண்டுகால திரைவாழ்க்கையில் பல நிராகரிப்புகள் முதல் கொலை மிரட்டல்வரை ஷாருக்கான் எதிர்கொண்டிருக்கிறார். இந்த காலத்திலும் ரசிகர்களிடம் அவருக்கு இருந்த ஆதரவு துளியும் குறையவில்லை. பதான் படம் வெளியாவதற்கு முன்பு ஷாருக்கான் நடித்த அடுத்தடுத்தப் படங்கள் தோல்வியை சந்தித்தன.


கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் தோன்ற இருந்த அவரை வரவேற்க, கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளின்போது அவர் வீட்டின் முன் ரசிகர்கள் முந்திய நாள் இரவில் காத்திருந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


ஷாருக்கானுக்கு ரமலான் வாழ்த்து கூற வந்த ரசிகர்கள்






ரமலான் பண்டிகையின்போது ஷாருக்கானுக்கு ரமலான் வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவர் வீட்டின் முன் திரண்ட நிகழ்சவு ஷாருக்கான் ரசிகர்களிடம் பெற்றிருக்கும் என்றென்றைக்குமான ஆதரவை காட்டுகிறது.


தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஷாருக்கான் தன் வீட்டு பால்கனியில் இருந்து ரமலான் வாழ்த்து தெரிவித்த வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .


கிங்


டங்கி படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான் அடுத்து கிங் படத்தில் நடிக்க இருக்கிறார். சுஜய் கோஷ் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் ஷாருக் கான் உடன் அவரது மகள் சுஹானாகான் இணைந்து நடிக்க இருக்கிறார். கிங் படத்தினைத் தொடர்ந்து சல்மான் கான் உடன் பதான் vs டைகர் படத்தில் ஷாருக்கான் நடிக்க இருக்கிறார்.