இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் பாலிவுட் நடிகை சாரா அலி கான் டேட்டிங் செய்து வருவதாக பல வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது இருவரும் ஒன்றாக மும்பையில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் டேட்டிங் செய்து வருவதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 



கார்த்திக் ஆர்யனுடன் முறிந்துபோன டேட்டிங் :


கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சாரா அலி கான் மற்றும் சுப்மன் கில் இருவரும் ஆங்காங்கே டேட்டிங் செய்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்தது.  இது குறித்த வதந்திகள்  எதற்குமே இருவரும் பிடிகொடுக்காமல் பதில் அளிக்காமல் இருந்து வந்தனர். முன்னர் ஒரு சமயம் சாரா அலி கான் நடிகர் கார்த்திக் ஆரியனுடன் டேட்டிங் செய்து வருவதாகவும் அவருடன் இருந்த உறவை 2020ம் ஆண்டே முடித்து கொண்டதாகவும் தகவல்கள் பரவி வந்தன.


 






 


சச்சின் டெண்டுல்கர் மகளுடன் டேட்டிங் :


கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 24 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்தார். பிறகு சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுடன் டேட்டிங் செய்து வந்ததாக வதந்திகள் பரவின.  இது குறித்து சச்சின் டெண்டுல்கர் ஒரு பேட்டியின் போது கூறுகையில், இவை அனைத்தும் வெறும் வதந்திகளே. அது குறித்து பதிலளிக்க எதுவும் இல்லை என மிகவும் நேரடியாக கூறியிருந்தார். பிறகு சாரா மற்றும் சுப்மன் கில் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அன்ஃபாலோ செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


 







வைரலாகும் வீடியோ: 



சாரா அலி கான் மற்றும் சுப்மன் கில் இருவரும் முன்னர் துபாய் ரெஸ்டாரண்டில் காணப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது. தற்போது இருவரும் ரெஸ்டாரண்டில் இருந்து வெளியேறுவது போன்ற வீடியோ ஒன்றும் விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவது போன்ற மற்றுமொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. இது தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தற்போதய பாலிவுட் ட்ரெண்டிங் நியூஸ் இவர்களின் டேட்டிங் தான். 



கடைசியாக நடிகர் அக்ஷய் குமார் மற்றும் தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான அட்ரங்கி ரே திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.