நாள்: 16.10.2022


நல்ல நேரம்:


காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை


மதியம் 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை









காலை 1.45 மணி முதல் காலை 2.45 மணி வரை


மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை


இராகு:


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை:


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இளைய சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். அன்பு நிறைந்த நாள்.


ரிஷபம்


பொன், பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களிடம் எதிர்பார்த்திருந்த உதவி சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.


மிதுனம்


உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உலகியல் நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றமும், பேச்சுக்களில் அனுபவமும் வெளிப்படும். ஆக்கப்பூர்வமான நாள்.


கடகம்


உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். செலவுகளின் தன்மைகளை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.


சிம்மம்


தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அதிக நேரம் செலவு செய்து மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.


கன்னி


தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள். சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.


துலாம்


மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மனதில் ஆலய தரிசனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். உற்சாகம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


பயணங்களின் போது எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். செய்கின்ற செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிர்பாலின மக்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில மாற்றமான சூழல் அமையும். கவலைகள் குறையும் நாள்.


தனுசு


மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.


மகரம்


மாமன்வழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டி தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பிடிவாத குணத்தினை மாற்றி கொள்வது நல்லது. உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.


கும்பம்


தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்கள் ஆதாயம் அடைவீர்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.


மீனம்


செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தாய்வழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வங்கி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். இன்பம் நிறைந்த நாள்.