சந்தானத்தால் தான் நான் இங்கு நிற்கிறேன் என்று கூறி அரங்கை அதிர வைத்த உதயநிதியின் ஸ்பீச் வைரலாகி வருகிறது.


சந்தானம் வளர்ச்சி


நகைச்சுவை நடிகர், மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக அறிமுகமான சந்தானம் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகராக மாறிவிட்ட அவருக்கு அதன்மூலம் திரையுலகிலும் வாய்ப்புகள் கிடைத்தன. திரையில் பல திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்த அவரது ஒன்லைனர்கள் மீம்ஸ் ஆகின. முதலில் ஹீரோக்களுக்கு நண்பனாகவும், நகைச்சுவை பாத்திரத்திலும் நடித்து வந்த சந்தானம், சூர்யா, கார்த்தி, உதயநிதி, ஆர்யா என தற்போதைய நடிகர்கள் அனைவரோடும் கைகோர்த்து நல்ல பாராட்டுகளை பெற்றிருந்தார். 



உதய் - சந்தானம் காம்போ


சந்தானம் உதயநிதி காம்போ உதயநிதியின் முதல் படத்திலேயே பெரிதாக ரசிக்கப்பட்டது. ஒரு கல் ஒரு கண்ணாடியில் தொடங்கி நண்பேன்டா, இது கதிர்வேலன் காதல் என மூன்று படங்களில் நண்பராக நடிக்க, இவர்களது காம்போ மக்களுக்கு பிடித்துப் போனது. ஹீரோவான பின்பு காமெடி தோற்றங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்த சந்தானம் உதயநிதிக்காக சில படங்களில் மட்டும் நடித்தார்.


தொடர்புடைய செய்திகள்: உஷாரா இருங்க... கேன்சர் கூட வரலாம்: உணவு உண்ணும் நேரம் முக்கியம்: ஆய்வு சொல்வது என்ன?


ஹீரோவாக சந்தானம்


ஆனால் அப்போதே ஹீரோவாக கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்குதுட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, ஏ1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலானோ, சபாபதி, என அடுத்தடுத்து படங்களை கொடுத்து வந்தார். முதன்முதலில் அறை எண் 350 -ல் கடவுள் என்னும் படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை நாயகராக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் மக்கள் இவரை ஏற்றுக் கொண்டனர்.



குலு குலு


இதனால் இவரது படங்கள் ஓரளவுக்கு வெற்றியும் கண்டன. சமீபத்தில் சந்தானம் "குலு குலு"  என்னும் படத்தில் நடித்து அது ஜூலை மாதம் வெளியாகி இருந்தது. அந்த படத்தை உதயநிதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தார். அதனை ரிலீஸ் செய்யுமாறு சந்தானம் கேட்க படம் கூட பார்க்காமல் ஒப்புக்கொண்டாராம் உதயநிதி. ஆனால் ரெட் ஜெயண்ட்ஸ் லோகோ போடலாமா என்று கேட்டபோது அதை நான் படத்தை பார்த்துவிட்டுதான் பொதுவாக முடிவு செய்வேன் என்று கூறினாராம். அடுத்த நாள் டீசர் வெளியிட வேண்டும் அதில் போட வேண்டுமே என்று கேட்டபோது, யார் இயக்குனர் என்று உதயநிதி கேட்டிருக்கிறார். ரத்னகுமார் என்று கூற அவர் நல்லாதான் எடுத்திருப்பார், லோகோ போட்டுக்கோங்க என்றாராம். அந்த படத்தின் ஆடிய வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி, "நான் ஒரு தயாரிப்பாளராக இங்கு வரவில்லை, சந்தானத்திற்காக அவர் நண்பனாக வந்திருக்கிறேன். நான் இந்த இடத்தில் ஒரு தயரிப்பாளராக, நடிகராக நிற்பதற்கு முழு காரணம் சந்தானம்தான்", என்று பேசினார்.