ஹோலி பண்டிக்கை
வண்ணங்களின் திருவிழாவாக கருதப்படும் ஹோலி பண்டிகை இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் முதியர்வர் வரை ஒருவருக்கொருவர் வண்ணம் பூசி இந்த நாளை கொண்டாடி வருகிறார். கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் கொண்டாட்டம் என்கிற பெயரில் பல அத்துமீறும் செயல்களும் வருடந்தோறும் நடந்து தான் வருகின்றன. குறிப்பாக இந்த பண்டிகையின் போது பெண்கள் கடும் அவதிகளை எதிர்கொள்கிறார்கள். இந்த ஆண்டும் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் வண்ணம் பூசுகிறேன் என்கிற பெயரில் அத்து மீறும் செயல்கள் நடந்து வருகின்றன. இந்த வீடியோக்கள் இணையத்தில் தற்போது பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.