ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. பிரசன்னா , த்ரிஷா , யோகிபாபு , அர்ஜூன் தாஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. 

குட் பேட் அக்லி படத்தின் கதை

குட் பேட் அக்லி படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய த்ரிஷா இல்லனா நயன்தாரா , மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் செட்டர் படமாக அமைந்தன. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி வருவதாக சினிமா வட்டாரங்கள் பேசப்படுகிறது. மேலும் டீசரில் அஜித் பலவிதமான தோற்றங்கள் வந்தது ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படியான நிலையில் குட் பேட் அக்லி படத்தின் கதை இணையத்தில் வெளியாகியுள்ளது

ஒரு காலத்தில் மிகப்பெரிய கேங்ஸ்டராக இருக்கும் அஜித் எல்லாவற்றையும் விட்டு திருந்தி வாழ நினைக்கிறார் . ஆனால் அவரது கடந்த காலம் அவரை விடாமல் துரத்துகிறது. கடந்த காலத்தில் அஜித்தின் பகை ஏ.கே வை நிம்மதியாக வாழ விடாமல் தடுக்க மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வில்லன்களை தீர்த்து கட்டுவது தான் குட் பேட் அக்லி படத்தின் கதை என இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.