விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெற்ற வளையபட்டி தவிலே பாடலுக்கு ஸ்ரேயா நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.


ஸ்ரேயா சரண்


பெரியளவில் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கர்களின் மனதில் இளமை மாறாமல் இருக்கும் ஒருவர் ஸ்ரேயா சரண். இஷ்டம் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம், விஜய்  நடித்த அழகிய தமிழ் மகன், விக்ரம் நடித்த கந்தசாமி மற்றும் விஷாலுடன் தோரணை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.


தமிழ் தவிர இந்தி, தெலுங்கு மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.  கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்டரே கோஸ்சீவை மணந்த ஸ்ரேயாவுக்கு சென்ற 2021ஆம் ஆண்டு ராதா எனும் பெண் குழந்தை பிறந்தது. தற்போது 41 வயதை எட்டியிருக்கும் ஸ்ரேயா தனது குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் சமூக வலைதளத்திலும் அவ்வப்போது தனது குடும்பத்துடன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.


ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஸ்ரேயா சரண் யாரும் எதிர்பார்த்ததை விட மிக விரைவில் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகிக் கொண்டார். அவரை இன்னும் நிறைய படங்களில் எதிர்பார்த்த ரசிகர்கள் இதனால் பெரும் ஏமாற்றத்திற்குள்ளானார்கள். இன்று நடிக்க வந்தாலும் அவருக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.


குழந்தைகளுடன் நடனம்


பிற மொழிகளில் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தாலும் தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இதற்கு பிறகு தமிழில் அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் வரவில்லையா இல்லை அவர் தமிழில் நடிப்பதை தவிர்த்து வருகிறாரா என்கிற குழப்பம் நீடித்து வருகிறது.






இப்படியான நிலையில் தற்போது ஸ்ரேயா நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சின்ன குழந்தைகளுடன் தான் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெற்ற  “வளையபட்டி தவிலே” பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். இந்த வீடியோவில் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.