ஆனந்த் அம்பானியின் திருமணக் கொண்டாட்டத்தில் ஹாலிவுட் பாப் பாடகர் ரிஹானாவுடன் சேர்ந்து நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது
ஆனந்த் அம்பானி திருமண விசேஷம்
முகேஷ் - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
ஹாலிவுட் பாப் பாடகர் ரிஹானாவின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த விழாவில், பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூர் - அலியா பட், சல்மான் கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, சோனாலி பிந்த்ரே, நடிகர் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ். தோனி, சச்சின் டெண்டுல்கர், சூரியகுமார் யாதவ், ஹிர்திக் பாண்டியா, பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நேவால் மற்றும் பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான காக்டெயில் பார்ட்டி ஒன்றும் நடைபெற்றது. இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த விழா நடைபெற்ற இடத்தின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
ரிஹானாவுடன் நடனமாடிய ஜான்வி கபூர்
ஹாலிவுட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட பாப் பாடகர் ரிஹானா. அவரது சொத்து மதிப்பு மட்டுமே ஒரு பில்லியன் இருக்கும் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் மட்டுமில்லை அவருடை சொத்து மதிப்பே பல கோடிகள் வரை இருக்கும். உலக அளவில் அவருக்கு தீவிர ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிகள் அவர் வந்து பாடல்களைப் பாடி நடனமாடியுள்ளது உலகம் முழுவதிலும் இருந்து கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரிஹானா மற்ற விருந்தினர்களுடன் மகிழ்ச்சிகரமாக உரையாடியுள்ளார். தற்போது ரிஹானாவும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருடன் இணைந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ஜான்வி கபூர் ரிஹானா ஒரு பெண் தெய்வத்தைப் போன்றவர் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : Anant Ambani : தோனி முதல் மார்க் ஜூக்கர்பெர்க் வரை... அம்பானியின் காக்டெயில் பார்ட்டியில் கலந்துகொண்ட பிரபலங்கள்