சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மார்ச் 2) எபிசோடில் வீர சங்கிலி போனை காணவில்லை என தேடுகிறான். தர்ஷினி இருக்கும் இடத்திற்கு சென்று போனை தேடி எடுக்கிறார்கள். குணசேகரன் போன் செய்து இருப்பதைப் பார்த்து யார் எடுத்து பேசினது என அனைவரையும் கேட்கிறான். தர்ஷினி மீது சந்தேகம் வருகிறது. மீண்டும் குணசேகரனுக்கு போன் செய்து பேசுகிறான். "ஜீவானந்தம் தப்பித்து விட்டான் அதனால் அவன் அங்கே வர வாய்ப்பு இருக்கிறது. வேற ஒரு போலீஸ் டீம் வேற தேடிகிட்டு இருக்கு. அதனால் இடத்தை மாத்திக்கிட்டே இரு. அந்த ஜீவானந்தம் வந்தா உடனே அங்கேயே கொன்னுடு" என்கிறார் குணசேகரன்.


 



ஜனனியும் அந்த போலீஸ் டீமும் தர்ஷினியை தேடி வருகையில், ஒரு இடத்தில் இறங்கி ரிலாக்ஸ் செய்கிறார்கள். "தர்ஷினியை தேட ஏதாவது ஒரு சின்ன லீட் கிடைச்சா தான் அதை நோக்கி நம்ம அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க முடியும்" என ஸ்பெஷல் ஆபீஸர் சொல்கிறார். அந்த சமயத்தில் ஒரு ஆள் அந்த வழியாக செல்கிறான். அவனை பார்த்ததும் ஜனனிக்கு ஏதோ தோன்றுகிறது. உடனே ஆஃபீஸரை அழைத்து "அன்று ஜீவானந்தனுடன் பன்றி மலைக்கு தர்ஷினியை தேடி போகும் போது அங்கே ஒருவன் வந்து விசாரித்தான். அவன் தான் இவன். எனக்கு ஏதோ இவனை ஃபாலோ செய்தால் தர்ஷினி பற்றி தெரியும் என தோணுது" என ஜனனி சொல்ல அனைவரும் உடனே கிளம்புகிறார்கள்.


 




ஜான்சியையும் கரிகாலனையும் குணசேகரன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ஜான்சி வர முடியாது என மறுத்தும் குணசேகரன் அவர்களை மிரட்டி அழைத்து செல்கிறார். ரேணுகா பேசியதை நினைத்து நந்தினி வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறாள். ரேணுகாவிடம் சென்று சமாதானம் பேசுகிறாள். ஆனால் ரேணுகா அவள் பேசியது அனைத்தையும் தப்பு தப்பாக எடுத்துக் கொள்ள சண்டை முற்றுகிறது. பயங்கரமாக சண்டை போட அதை தடுக்க ஞானம் உள்ளே வர "ஏன் இல்லாததை எல்லாம் சொல்லி சண்டை மூட்டிவிட்டீங்க" என நந்தினி கேட்கிறாள். அந்த நேரம் பார்த்து குணசேகரன் வீட்டுக்கு வர வெளியில் வரை அவர்களின் சண்டை சத்தம் கேட்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வீட்டு பெண்களுக்குள் சண்டை பயங்கரமாக நடக்க, கதிரும் சென்று சமாதானப்படுத்த செல்கிறான். உடைந்து போய் இருக்கும் நந்தினியை சமாதானம் செய்து அழைக்கிறான். அப்போது அங்கே வந்த குணசேகரனை பார்த்ததும் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். "அது தான் தெரு வரைக்கும் நாறுதேடா இன்னும் என்னத்தை பொத்தி வைக்க போறீங்க?" என நக்கலாக கேட்கிறார். கடுப்பான ஞானம் "சும்மா எதையாவது பேசிக்கிட்டே இருக்காதீங்க" என சொல்லவும் கடுப்பாகிறார் குணசேகரன்.


 




பன்றி மலையில் அந்த ரவுடி பின்னாலேயே பாலோ செய்து போகிறார்கள் ஜனனி மற்றும் போலீஸ் டீம். அவன் யாரிடமோ போன் செய்து பேசுகிறான். அதை கேட்ட ஆபீசர் ஒருவர் வந்து "இவன் தான் பொண்ணை முதலில் கடத்தி வைச்சு இருக்கான். அப்புறம் யார்கிட்டேயோ கைமாத்தி விட்டு இருக்கான். இப்போ இவனை பாலோ பண்ணி அவனை புடிச்சுடலாம்" என அவர் சொல்கிறார். அதைக் கேட்ட ஸ்பெஷல் ஆபீஸர் அவனை பாலோ செய்ய உத்தரவிடுகிறார்.


 



இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.