மலையாள நடிகர் துல்கர் சல்மான் தனக்கு பிடித்தமான காரை பற்றி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவில், “ இதைச் செய்ய நீண்ட காலமாக முயற்சிக்க செய்து வந்தேன். ஆனால் வழக்கம் போல இதை செய்வது குறித்து அதிகமாக யோசித்துக்கொண்டே இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னை போல லட்சக்கணக்கான ஆர்வலர்கள் இருப்பதை உணர்ந்தேன். அந்த உணர்தல், இதை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும், அவர்களுடன் ஈடுபடுவதிற்கும் ஒரு வழியாக இருக்கும் என நினைத்தேன். அதன் பிரதிபலிப்புதான் இந்த வீடியோ. இப்போது நான் பல ஆண்டுகளாக சேகரித்து வைத்திருந்த ரத்தினங்களை காண்பிக்கிறேன்.
நான் 02 BMW M3 ரக காரை சிறந்த காராக நினைக்கிறேன். அதே போல E46 ரக காரின் வடிவமைப்பிற்கு நான் பெரிய ரசிகன். நான் இந்தக்காரை உண்மையாகவும் மிக கவனமாகவும் பாதுகாத்து வருகிறேன். அதில் ஏதாவது கீறல் விழுந்து விடுமோ என்ற பயம் எனக்கு இருக்கும்.
கார் திருடப்படுவது போலவும், நாசப்படுத்தபடுவது போலவும் கனவுகள் வரும். அப்போது நான் வேர்த்து விறுவிறுத்து எழுந்து இருக்கிறேன். இந்தக்காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். துல்கரிடம் Ferrari 458 Spider, BMW X6 M, Porsche Panamera Turbo, Mercedes – AMG G63 மற்றும் Volkswagen Polo GT உள்ளிட்ட கார்களும் இருக்கின்றதாம். அதே போல அவரிடம் அவர் விரும்பும் சில பைக்குகளையுன் கைவசம் வைத்திருக்கிறார்.
மலையாளத்தில் முன்னணி நடிகரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். தனது 26வது வயதில் தான் திரையில் பிரவேசித்த அவர், 2012 ஆம் ஆண்டு செகண்ட் ஷோ என்ற படம் மூலம் தான் அவர் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்த அவர் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தடம் பதித்து பான் இந்தியா ஸ்டாராக மாறியிருக்கிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சீதாராமம் படம் அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது.