துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள்
இந்தியாவில் தீபாவளி எந்த அளவிற்கு கோலாகலமாக கொண்டாடப் படுகிறதோ அதே அளவிற்கு விஜயதசமி பண்டிகையும் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்நாளில் துர்கை அம்மனுக்கு மிக பிரம்மாண்டமாக வழிபாடு நடைபெறும். அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற சிறப்பு துர்கா பூஜை நிகழ்வில் முன்னணி பாலிவுட் நடிகர்கள் கலந்துகொண்டார்கள். ஜெயா பச்சன் , ரன்பீர் ஆலியா பட் , கஜோல் அஜய் தேவ்கன் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்வில் நடிகை கஜோல் நிகழ்வுக்கு வந்திருந்த பத்திரிகையாளர்களிடம் கடுமையாக பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பத்திரிகையாளர்களிடம் சீறிய கஜோல்
தனது கணவர் அஜய் தேவ்கன் மகன் ஆகியோருடன் கலந்துகொண்ட கஜோல் இந்த நிக்ழ்வை தலைமையேற்று நடத்தினார். அப்போது அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் செருப்பு கால்களுடன் பூஜை நடைபெறும் இடத்திற்கு வந்ததால் அவர் கோபமடைந்தார். காலணிகளை கழற்றச் சொல்லியும் பின் வருபவர்களுக்கு வழிவிடும் படியும் அவர் பத்திரிகையாளர்களிடம் கோபமாக பேசிய விடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.