த்ரிஷா

தமிழ் சினிமாவில் கடந்த 22 ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகை த்ரிசா.  நாய்களின் மேல் அதீத பிரியம் கொண்டவர் த்ரிஷா.  பல்வேறு தெரு நாய்க்களை தத்தெடுத்து வளர்த்தும் வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் தனது வளர்ப்பு நாய் ஸோரோ இறந்துவிட்டதாக த்ரிஷா தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

" என் மகன் ஸோரோ இறந்துவிட்டான் .  இனி வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இல்லை . நானும் எனது குடும்பத்தினரும் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறோம். சில காலம் இடைவேளை எடுத்துக் கொள்ள இருக்கிறேன். " என த்ரிஷா பதிவிட்டிருந்தார். 

த்ரிஷா வெளியீட்ட க்யூட் வீடியோ

காதலர் தினத்தன்று நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது வளர்ப்பு நாய் இறந்தத சில மாதங்களில் மற்றொரு நாயை வளர்க்கத் தொடங்கியுள்ளார் த்ரிஷா. இந்த நாயின் க்யூட் சேட்டைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். மேலும் இந்த நாய் தான் தனது வேலண்டைன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்