கலைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஷங்கரின் திரமணம் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோகித் என்பவருக்கும் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஷங்கருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ரோகித் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார் ஐஸ்வர்யா ஷங்கர். தற்போது ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் என்பவருடன் தனது மகளின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் ஷங்கர்.
பாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான திரைப் பிரபலங்கள் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்கள். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு உற்சாகமாக விருந்தினர்களுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர் , இயக்குநர் அட்லீ மற்றும் ரன்வீர் சிங் ஆகிய மூவரும் சேர்ந்து காவாலா மற்றும் ஜவான் பட பாடலுக்கு நடனமாடு வீடியோ பரவலாக ஷேர் செய்யப் பட்டு வருகிறது .