சாய் பல்லவி


உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் பரிசை தவறவிட்டார்  நடிகை சாய் பல்லவி .  பரிசை தவறவிட்டாலும் கோடிக்கணக்கான தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார். பிரேமம் படத்தில் மலராக அறிமுகமான சாய் பல்லவி இன்று தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கார்கி , விரட்டா பர்வம்  போன்ற படங்களில் சோலோவாக நடித்தும் அசத்தி வருகிறார் .


தற்போது சிவகார்த்திகேயன்  நடித்து ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்திலும் , தெலுங்கில் நாக சைதன்யாவுடனும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியில் ரன்பீர் கபூர் உடன் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். 


ஷீலா கி ஜவானி பாடலுக்கு நடனமாடிய சாய் பல்லவி 


தனது கல்லூரி காலத்தில் இருந்தே நடனத்தைத் தொடர்ந்து வருகிறார் சாய் பல்லவி  . ஒரு பக்கம் சாய் பல்லவியின்  நடிப்பிற்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றால் மறுபக்கம் அவரது நடனத்திற்கு ஒடு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது . தெலுங்கில் சாரங்க தரியா , தமிழில் ரவுடி பேபி என ஒரு சில பாடல்களில் தனது அசாதாரணமான நடனத்  திறமையை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் தனது குடும்ப நிகழ்ச்சியில், சினிமா நிகழ்ச்சிகளில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்தால் அதை அவர் தவறவிடுவதே இல்லை.






சாய் பல்லவி தனது கல்லூரி காலத்தில் பிரபல பாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது . இந்தியில் தீஸ் மார் கான் படத்தில் கத்ரீனா கைஃப் நடனமாடி மிகப்பெரிய ஹிட் ஆன ‘ஷீலா கி ஜவானி’ பாடலுக்கு கத்ரீனா மாதிரியே சாய் பல்லவி நடனமாடுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.