சின்னத்திரையில் தொகுப்பாளரும் நடிகையுமான டிடி , பிரபல டிஜிட்டல் நிறுவனம் நடத்திய விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது வரவேற்பு அறையில் விருந்தினர்களுக்கான ஃபன்ஃபில்டு கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த வகையில் டிடியிடம் கேள்வி கேட்கப்பட்டது. முதலில் நலமாக உள்ளீர்களா என தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், " ரொம்ப பாசிட்டிவா இருக்கேன், கொரோனா மட்டும் நெகட்டிவா இருந்தா போதும் " என்றார்




பிறகு சில பொருட்களை கொடுத்து, அதனை யாருக்கு டெடிக்கேட் செய்வீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

முதலில் வழங்கப்பட்ட லிப்ஸ்டிக்கை யாருக்கு கொடுப்பீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது , அதற்கு பதிலளித்த டிடி "மேக்கப் இல்லாமலே அழகா இருக்கும் திரிஷாவிற்கு வழங்குவேன் என்றார். அடுத்ததாக வெள்ளி நிற காப்பு ஒன்றினை எடுத்த டிடி, இதனை நடிகர் அஜித்திற்கு வழங்குவேன் என்றும் என்னை அறிந்தால் படத்தில் அஜித் வெள்ளி காப்புடன் வரும் காட்சிகள் சூப்பராக இருக்கும்  என தெரிவித்தார். பின்னர் எடுத்த சாவியினை எடுத்த டிடியிடம் , சிறையில் இருக்கும் யாரையாவது காப்பாற்ற விரும்பினால், யாரை காப்பாற்றுவீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடி, மொக்கை ஜோக் அடித்து மக்களை கொல்லும் தங்கதுரையிடம் இருந்து மக்களை காப்பாற்றுவேன் என்றார் சிரித்தப்படி.




இறுதியாக விஜய் 65 குறித்த அப்டேட் ஏதேனும் உள்ளதா என தொகுப்பாளர் கேட்க, அதைப்பற்றி நானும் லோகேஷும் பேசுவதில்லை என பதிலளித்தார். இயக்குநர் நெல்சன்  இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சனும், தொகுப்பாளர் டிடியும் நெருங்கிய நண்பர்கள் என்ற அடிப்படையில்தான் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது. 




தான் விஜயை நேரில் பார்க்க வேண்டும் என பலமுறை நெல்சனிடம் தெரிவித்தும் அவர் மறுத்துவிட்டார். எனவே விஜய் அண்ணா ஒரு வார்த்தை சொன்னால் நாங்கள் குடும்பத்துடன் சூட்டிங் ஸ்பார்ட்டுக்கே வந்துவிடுவோம் என அன்புக்கோரிக்கை விடுத்துள்ளார் டிடி. இந்த வீடியோ இப்போது செம்ம வைரல்.