பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக ஜனவரி 11ம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படம் உலகெங்கிலும் வெற்றிநடை போட்டு வருகிறது. அந்த வகையில் 'வாரிசு' படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றுவருகிறது. இந்த விழா மூலம் படக்குழுவினர் அனைவரும் 'வாரிசு' படத்திற்கு கொடுத்த வரவேற்பிற்கு ஊடகங்களை சந்தித்து  நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள். 



'வாரிசு' படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா


 


இயக்குநர் வம்சி :


வாரிசு படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி, விடிவி கணேஷ், ஷ்யாம், சரத்குமார், இசையமைப்பாளர் தமன், நடிகை சங்கீதா, பாடலாசிரியர் விவேக், ஒளிப்பதிவாளர் பிரவீன் உள்ளிட்டோர் காணாது கொண்டனர். இந்த விழாவில் பேசிய இயக்குநர் வம்சி, 'வாரிசு' படத்தின் வெற்றியை ஆர்ட் டைரக்டர் சுனில் பாபுவிற்கு சமர்ப்பித்தாக தெரிவித்தார். மேலும் தன் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை கொண்டு வர எனக்கு உதவியாய் இருந்த அனைவருக்கும் நன்றிகள்.






நான் ஒரு தெலுங்கு இயக்குநர் என பலரும் கூறியது மிகவும் வருத்தமாக இருந்தது. நான் ஒரு தமிழ் இயக்குநர் தெலுங்கு இயக்குநர் என்பதை எல்லாம் கடந்து நான் ஒரு மனிதன். அனைத்து தடைகளையும் தாண்டி முன்னேற நினைக்கும் ஒரு மனிதன். எனக்கு வரவேற்பு கொடுத்த மக்கள், ஊடக நண்பர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்றார். 







இயக்குநருக்கு கிளாஸ் எடுத்த விடிவி கணேஷ் :
 
மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விடிவி கணேஷ் பேசுகையில் "வம்சி சார் நீங்கள் தெலுங்கு இயக்குநர் என பேசுவது பற்றி வருத்தப்பட்டீர்கள். கவலைப்படாதீர்கள். அப்படி உங்களை யாரும் நினைக்கவில்லை, தமிழ்நாடு மக்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அது தான் தமிழ்நாடு மக்களுக்கு உள்ள ஒரு சிறப்பு. அனைவரையும் வாழ வைக்கும் நாடு. அதனால் கவலைப்படாதீர்கள் இது போன்ற வருத்தத்தை எல்லாம் மறந்துவிடுங்கள். வாரிசு படத்தை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஏன் வெளிநாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். அதே போல அது இதுன்னு  பேசக்கூடாது. அதெல்லாம் மாடுகள சொல்றது, மனுஷங்கள இல்ல. அவுங்க, இவங்க, இவருன்னு பேசணும். இல்லேனா நம்ம பசங்க கோபப்பட்டிருவாங்க. நான் மெதுவா கத்து கொடுக்குறேன்” என இயக்குநர் வம்சிக்கு அட்வைஸ் செய்தார் நடிகர் விடிவி கணேஷ்.