விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, படங்களை தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் - நடிகர் சிம்பு கூட்டணியில் உருவாகி இருக்கும் மூன்றாவது திரைப்படம் "வெந்து தணிந்தது காடு". இப்படத்தில் சிம்பு ஜோடியாக சித்தி இதானி, ராதிகா சரத்குமார் நடிப்பில், ஏ. ஆர். ரஹ்மான் இசையில் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தான் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. நடிகர் சிம்பு இப்படத்தில் இதுவரையில் நடிக்காத ஒரு புதிய சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.


 


 


தமிழகத்தை சுற்றும் பேருந்து :


"வெந்து தணிந்தது காடு" படம் வெளியாக ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் விளம்பர பணிக்காக இப்பட குழுவினர் ஒரு வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுற்றி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது "வெந்து தணிந்தது காடு" பேருந்து.


 






 


தேனி மாவட்டத்தில் தஞ்சம் :


அந்த வகையில் தற்போது "வெந்து தணிந்தது காடு" தேனி மாவட்டம் சின்னமன்னுர் கிராமத்தை வந்தடைந்தது. தேனி மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர், ‛வணக்கம்டா மாப்ளை’ என்கிற பெயரில் டிக்டாக் இருந்த காலத்திலிருந்து பிரபலம். டிக்டாக் தடைக்குப் பின் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரது வீடியோக்கள் மிக பிரபலம். வெந்து தணிந்தது காடு விளம்பர பஸ் சின்னமனூர் வந்த நிலையில், அங்கு வந்த அருண்குமார், தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அந்த பேருந்து உள்ளே டூர் சென்று, அந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அந்த காட்சிகளை லைவ் செய்த அருண்குமார், பின்னர் அதை தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பஸ் உள்ளே, படத்தில் சிம்பு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக விளக்கிய அருண்குமார், விரிவாக அது பற்றிய பேசினார். 


 






 


சிம்பு பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சி :


நடிகர் சிம்பு இந்த திரைப்படத்தில் பயன்படுத்திய சட்டை, வெட்டி, தலையணை, பாய், சூட்கேஸ், ட்ரங்கு பேட்டி, இசக்கி பரோட்டா கடை போன்ற செட்டிங், சிம்பு பயன்படுத்திய டேபிள், சால்னா வாழி, காடுகளில் பயன்படுத்திய மரக்கட்டை செருப்பு, அறிவாள், தொரட்டி உள்ளிட்டவை ரசிகர்களின் பார்வைக்காக காட்சிபடுத்தப்பட்டுள்ளன. மேலும் படத்தின் பாடல்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. தேனீ மாவட்டம் சின்னமன்னுரை அடுத்து அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு இந்த வெந்து தணிந்தது காடு பேருந்து பயணம் செய்ய உள்ளது. சிம்பு ரசிகர்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி ஒரு வெற்றி முயற்சி தான்.