கோலிவுட் சினிமாவில் பிரபலமானவர் நடிகையும் , விஜேவுமான விலாசினி. டப்பிங் கலைஞரான இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடிகை ரெஜினாவுக்கு டப்பிங் பேசி முதன் முதலாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு  'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'காக்கிச்சட்டை' உள்ளிட்ட படங்களில்  நடிகை ஶ்ரீதிவ்யாவின் எல்லா படங்களிலும் இவர்தான் டப்பிங். 'ருத்ரமாதேவி' படத்தில் நடிகை நித்யா மேனன், 'பொதுவாக என் மனசு தங்கம் ’ படத்தில் நிவேதா பெத்துராஜ்,  'யாக்கை' படத்தில் நடிகை சுவாதி என 75 படங்களுக்கும் மேல் டப்பிங் கொடுத்துள்ளார். தற்போது தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் விலாசினி.






விஜே.விலாசினி இளையராஜாவிற்கு நெருக்கமான சொந்தக்காரர். விலாசினியின் சொந்த அத்தை கணவர்தான் இளையராஜா. விலாசினிக்கு பெயர் வைத்ததே இளையராஜாதானாம். விலாசினி என்றால் இளையராஜாவிற்கு மிகவும் பிடிக்குமாம். எப்போவாது அவரை சந்திக்க செல்லும் விலாசினியை  நீ, ஏதோ தூரத்து சொந்தம் மாதிரி எப்பவாச்சும் வர்றே. அடிக்கடி வந்துப் போயேன் .. என கடிந்துக்கொள்வாராம் இளையராஜா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜே விலாசினி சமீபத்தில் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்  சதி லீலாவதி திரைப்படத்தில் கோவை சரளாவின் மறக்க முடியாத வசனம் ஒன்றை பேசி பதிவிட்டுள்ளார். அதுவும் ஒரே டேக்கில் எடுத்த வீடியோவாம். அந்த  வீடியோவை பகிர்ந்த விலாசினி , நான் சதி லீலாவதி படத்தின் மிகப்பெரிய ரசிகை எனவும் குறிப்பிட்டுள்ளார்.