சூப்பர் சிங்கர் பாவனா என்று அறியப்பட்டவர் இப்போதெல்லாம் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பாவனா என்றுதான் அறியப்படுகிறார். இப்போது அவர் அண்மையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்திருந்தார். அவர் தனது தொழில் அனுபவங்களை ஒரு யூடியூப் சேனலிடம் பேட்டியளித்துள்ளார்.


அந்தப் பேட்டியிலிருந்து..


செஸ் ஒலிம்பியாட் போட்டியை முதலில் நான் மட்டுமே தனியாக ஹோஸ்ட் செய்வதாக இல்லை. இது நடந்ததே ஒரு பெரிய கதைதான். நானும் சாரு ஷர்மா சாரும் சேர்ந்தே நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தது. 27 ஆம் தேதி ஒத்திகை நடந்தது. அப்போது விக்னேஷ் சிவன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், முதல்வர் அலுவலக அதிகாரிகள் என நிறைய பேர் இருந்தனர். இரவு 10 மணியளவில் நான் வீட்டுக்கு புறப்பட்டேன். அம்மா எனக்குத் தேவையான ட்ரெஸ் எல்லாம் ரெடி செய்திருந்தார். மறுநாள் தான் நிகழ்ச்சி. எனக்கு அது பிக் டே. காலை 11.30 மணிக்கெல்லாம் நிகழ்விடத்திற்கு வந்துவிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் 11 மணிக்கு தான் எனக்குத் தெரியும் சாரு ஷர்மா சாரால் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை என்பது. எனக்கு முதலில் எக்ஸ்டைமென்டாக இருந்தது. சரி பண்ணிடலாம் என்ற ஃபீல் வந்தது. ராகினியிடம் நான் செய்துவிடுகிறேன் என்று சொன்னேன். அதுபோல் எல்லாம் நடந்தது. 


ஃபன் டூ ஸ்போர்ட்ஸ் எப்படி நடந்தது?


நான் முழுக்க முழுக்க என்டர்டெய்ன்மென்ட் துறையில் இருந்துவிட்டேன். எப்போதும் பொழுதுபோக்கு துறையில் இருந்து சினிமாவிற்கு தான் செல்வார்கள். எனக்கு சினிமாவில் நடிக்கும் திறமையில்லை. அதனால் நான் பொழுதுபோக்கு துறையில் இருந்து ஸ்போர்ட்ஸ் இன்டஸ்ட்ரீயை தேர்வு செய்தேன். நான் கடின உழைப்பாளி, நல்ல வாசிப்பாளர். அந்த இரண்டின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டு நான் அத்துறையில் காலடி எடுத்துவைத்தேன். ஆனால் அது மிகப்பெரிய சவால் என்பதை தெரிந்தே தான் உள்ளே நுழைந்தேன். என்னை ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கூப்பிட்டபோது என்னை எதற்கு கூப்பிட்டீர்கள் என்று தான் கேட்டேன். சார் எனக்கு பாலை கேட்ச் பிடிக்கக் கூட தெரியாது. பால் வந்தால் நான் அதை கேட்ச் பிடிக்க மாட்டேன். முகத்தை மூடிக் கொள்வேன் என்றேன். ஆனால் அவர்கள் நீங்கள் ஒன்றும் பந்து பிடிக்கப் போவதில்லை. நீங்கள் கேள்விகளை கேட்கப்போகிறீர்கள் என்றார்கள். என்னை ஊக்குவித்தார்கள். ரெக்கார்டட் ஷோஸில் இருந்துவிட்டு லைவ் ஷோ பண்ணுவது எனக்கு மிகப் பெரிய சவாலாக இல்லை. காரணம் நான் சூப்பர் சிங்கர் செய்யும்போது நிறைய ஆங்கில லைவ் ஷோக்களில் காம்பீரிங் பண்ணிக் கொண்டிருந்தேன்.


சிவா ஒரு ஸ்டார்:
சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பான நடிகர். அவரது வளர்ச்சி அபாரமானது. அவரைப் போன்ற ஒரு உழைப்பாளியை நான் பார்த்ததே இல்லை. அவர் வெற்றி போற்றுதற்குரியது. அவர் நிச்சயம் மிகப்பெரிய ஸ்டாராக உருவெடுப்பார்.


ஜிவா தோனி ஒரு ஸ்வீட் குட்டி:


ஜிவா ஒரு ஸ்வீட்டான குட்டிப் பெண். அவர் என்னிடம் நன்றாக பேசுவார். எம்.எஸ்.தோனி ஒரு எளிமையான நபர். அவர் எவ்வளவோ சாதித்துவிட்டார். ஆனால் அவர் எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. அதுபோல் அவர் தனக்கு காபி கொடுக்கும் நபர் முதல் அனைவரையும் நினைவில் வைத்து நலம் விசாரிப்பார். என்னைப் போன்ற ஒரு ஆங்கரையும் அங்கீகரிப்பார். அந்த அங்கீகாரம் தான் அவருடைய ஸ்பெஷாலிட்டி. அவரிடமிருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன்.


அதுபோல், ஸ்ரீகாந்த் சாரிடம் இருந்து துணிச்சலை நான் கற்றுக் கொண்டேன்.


இவ்வாறு பாவனா பேட்டியில் கூறியுள்ளார்.