Trauma Review : விவேக் பிரசன்னா நடித்துள்ள ட்ராமா படம் எப்படி இருக்கு...முழு விமர்சனம் இதோ
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா , பூர்ணிமா ரவி நடித்துள்ள ட்ராமா படத்தின் மிழு விமர்சனம் இதோ

ட்ராமா
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ட்ராமா. ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், 'ஸ்மைல்' செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் . கடந்த மார்ச் 21 ஆம் திரையரஙகில் வெளியாகிய இப்படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.
கதை
குழந்தை இல்லாத கவலையில் இருக்கும் விவேக் பிரசன்னா மற்றும் சாந்தினி தம்பதி, இவர்களின் நண்பனாக வரும் ஆனந்த் நாக், பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் பூர்ணிமா ரவி , அவரை காதலிக்கும் பார்த்தோஷ் , நண்பர்களுடன் சேர்ந்து வாகனம் திருட்டில் ஈடுபடும் ஈஸ்வர் , குழந்தை இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக பிரதீப் கே விஜயன். இந்த நான்கு கதாபாத்திரங்களையும் ஒரு பொதுவான பிரச்சனை இணைக்கிறது. அந்த பிரச்சனை என்ன என்பதே ட்ராமா படத்தின் கதை.
செயற்கை கருத்தரிப்பு என்கிற பெயரில் நடக்கும் மோசடியை மையமாக வைத்து த்ரில்லர் ஜானரில் இக்கதைதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். குழந்தை இல்லாத பிரச்சனைக்கு தன் சார்பில் நியாயமான ஒரு தீர்வையும் படத்தின் மெசேஜாக இருக்கிறது.
ட்ராமா விமர்சனம்
உணர்வுப்பூர்வமான ஒரு கதையை சொல்ல முற்பட்டாலும் ட்ராமா படத்தில் கருத்தியல் ரீதியான நிறைய முரண்கள் வெளிப்படையாக உள்ளன. இன்றைய சூழலில் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாததை ஆண்மையுடன் தொடர்புபடுத்தி இருப்பது ரொம்ப பழைய ஐடியாவாக இருக்கிறது. அதே நேரம் செயற்கை கருத்தரிப்பு தொடர்பான பிரச்சனையை மேம்போக்காக பேசியிருப்பது பொதுபுத்தியில் அதன் மீது ஒரு நெகட்டிவான அபிப்பிராயத்தையே உருவாக்கும். அதில் இயக்குநர் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். ஏகப்பட்ட அப்பட்டமான லாஜிக் ஓட்டைகள்.
இப்படி கதை பல திசைகளில் தடுமாறி நிற்க நடிகர்களின் நடிப்பு மட்டுமே படத்தின் பெரிய பிளஸாக இருக்கிறது.
நடிப்பு எப்படி
காமெடி , செண்டிமெண்ட் என இரண்டிலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர் விவேக் பிரசன்னா. ட்ராமா படத்தை பொறுத்தவரை மிகவும் மிகையில்லாத நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது மனைவியாக வரும் சாந்தினி சிக்கலான உணர்வுகளை சுமக்கும் பெண்ணாக சிறப்பாக பொருந்தி இருக்கிறார்.
காதர்களாக வரும் பூர்ணிமா ரவி மற்றும் பார்த்தோஷ் ஆகிய இருவரின் கதாபாத்திரமும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருப்பதோடு சிறப்பாகவும் நடித்துள்ளார்கள்.
படத்தில் பிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள வையாபுரி , நிழல்கள் ரவி , மாரிமுத்து ராமா சஞ்சீவ் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.