இட்லி கடை
தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக தனுஷ் இயக்கியுள்ள படம் இட்லி கடை. நித்யா மேனன் , ராஜ்கிரண் , அருண் விஜய் , பார்த்திபன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இட்லி கடை ரிலீஸ் தள்ளிப்போகும் காரணம்
வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது இட்லி கடை. அதே நாளில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இதனால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குட் பேட் அக்லி படத்துடன் இட்லி கடை படம் வெளியானால் படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இருக்காது என்பதால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதாக நெட்டிசன்கள் தெரிவித்தார்கள். தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணத்தை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்
இன்னும் 10 சதவீதம் படப்பிடிப்பு மீதமிருப்பதாகவும் இந்த காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்க வேண்டியவை அனைத்து நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பதில் சில சவால்கள் இருப்பதாகவும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார் . நல்ல படம் வந்திருக்கு அதனால் அவசரப்பட வேண்டாம் என்றுதான் காத்திருக்கிறோம். கூடிய சீக்கிரம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.