தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் படத்தில் கலந்து கொள்ளாத நடிகர் விஷ்வாக் சென்னை நடிகர் அர்ஜூன் கடுமையாக சாடியிருந்த நிலையில் அவர் தனது தரப்பு விளக்கங்களை தெரிவித்துள்ளார். 


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்த அர்ஜூன் தற்போது வில்லன் வேடங்களில் நடித்து வருகின்றார். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து Prema Baraha என்ற கன்னடப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா தற்போது தெலுங்கு  பெயரிடப்படாத படத்தில் மூலம் அறிமுகமாகிறார். இந்த படத்தை நடிகர் அர்ஜூன்  தனது  ஸ்ரீராம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். 






பொறுப்பற்ற ஹீரோ 


வளர்ந்து வரும் ஹீரோவான விஷ்வாக் சென் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சமீபத்தில் பவண் கல்யாண் முன்னிலையில் பூஜையும் பிரம்மாண்டமாக நடந்தது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் கேரளாவிற்கு படப்பிடிப்பு சென்ற நிலையில் ஜெகபதி பாபுடனான நடிக்கும் காட்சி படமாக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால்  பல மணி நேரம் காத்திருந்தும் விஷ்வாக் சென் வரவில்லை. இதனால் டென்ஷனான நடிகர் அர்ஜூன் செய்தியாளர் சந்திப்பை நிகழ்ச்சி சரமாரியாக விஷ்வாக் சென்னை விமர்சித்தார். 


அவர் கொஞ்சம் கூட பொறுப்புடையவராக இல்லை என்றும்,  கேட்ட சம்பளத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகும் என்னுடைய அழைப்புகளுக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் இருக்கிறார்.என் வாழ்க்கையில் இப்படி குறைவான அர்ப்பணிப்பு கொண்ட நடிகரை நான் கண்டதில்லை. பணத்தை இழந்தாலும் பரவாயில்லை விஷ்வாக்கை வைத்து இப்படத்தை தொடர மாட்டேன் அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிக்கவுள்ளார் எனவும் தெரிவித்தார். இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


அர்ஜூனால் மன அழுத்தம் 


இந்நிலையில் அர்ஜூனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த விஷ்வாக் சென், படத்திற்கான முதல் பாதி ஸ்கிரிப்டை படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் பெற்றதாகவும், கதையில் எனது கருத்தினை வழங்க எவ்வித இடமும் தரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு விஷயத்திலும் அர்ஜூன் தன்னை வருத்துவதாகவும், இது தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதால் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை எனவும் விஷ்வாக் தெரிவித்துள்ளார். 


அர்ஜுன் மீது எனக்கு மரியாதை உள்ளது. நான் அவரிடம் கேட்டதெல்லாம் படத்தைப் பற்றிய சில விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்பது தான். நான் எப்பொழுதும் என் பிரச்சனைகளை நான்கு சுவர்களுக்கு நடுவே தீர்த்துக் கொள்கிறேன் என விஷ்வாக் சென் தெரிவித்துள்ளார்.