Vishnu Vishal: கொடைக்கானலில் இருந்து விஷ்ணு விஷால்... ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ் பகிர்ந்த ராட்சசன்!  

Vishnu Vishal: விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணியில் மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் VV21 படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. அங்கிருந்து போட்டோஸ் பகிர்ந்துள்ளார் விஷ்ணு விஷால். 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்ததால் தொடர்ச்சியாக அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. 

Continues below advertisement

விஷ்ணு விஷால்:

நல்ல கதைக்களம், கதாபாத்திரம் கொண்ட படங்களான ஜீவா, முண்டாசுப்பட்டி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட பல படங்கள் மிக நல்ல வரவேற்பை பெற்றதுடன் ஏராளமான ரசிகர்களையும் பெற்று கொடுத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிக சரியாக பயன்படுத்தி கொண்டு அவருடைய திரைப்பயணத்தை சரியாக நடத்தி வந்தார். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'லால் சலாம்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பதால் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது. இருப்பினும் படம் வெளியானதும் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. இருப்பினும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என விஷ்ணு விஷாலுக்கு இருந்த கனவு இப்படம் மூலம் நிறைவேறியதாக தெரிவித்து இருந்தார். 

 

ராட்சசன் இயக்குனருடன் மீண்டும் கூட்டணி:

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் திரை பயணத்தில் மிக முக்கியமான டர்னிங் பாய்ண்ட் படமாக அமைந்தது 'ராட்சசன்'. இப்படத்தை இயக்கியவர் ராம்குமார். விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணியில் உருவான முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் இரண்டுமே மிக பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. தற்போது மீதும் இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படத்துக்கு தற்காலிகமாக VV21 என தலைப்பிடப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு  கொடைக்கானலில் ஏற்கனவே தொங்கி இரண்டு ஷெட்யூல் முடிந்துவிட்டன. சில தினங்களுக்கு முன்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியதாக போட்டோ போஸ்ட் மூலம் தெரிவித்து இருந்தார் நடிகர் விஷ்ணு விஷால். அதை தொடர்ந்து கொடைக்கானலில் எடுக்கப்பட்ட  இரு போட்டோக்களை மீண்டும் தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் விஷ்ணு விஷால். 

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

இயக்குனர் ராம்குமார் நடிகர் தனுஷ் வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவர் தொடர்ச்சியாக பல படங்களில் பிஸியாக இருப்பதால் அது கால தாமதமாகும் என்பதால் விஷ்ணு விஷாலுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து விட்டார். இந்த கூட்டணி ஏற்கனவே இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளதால் இந்த படமும் நிச்சயம் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். படம் குறித்த மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement