விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர்  பிரவீன் K இயக்கத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க,  இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Continues below advertisement

விஷ்ணு விஷாலின் ஆர்யன் படம் எப்படி இருக்கு ?

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான  ராட்சசன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப்படமாக அமைந்தது . இதேபோல் கிரைம் த்ரில்லர் படமாக விறுவிறுப்பான இன்வஸ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகியுள்ளது ஆர்யன்.  இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து  நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் இன்று சிறப்பு திரையிடல் சென்னையில் நடைபெற்றது. ஆர்யன் படத்தைப் பார்த்த விமர்சகர்கள் படம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார்கள் என பார்க்கலாம் 

Continues below advertisement

ஆர்யன் திரைப்பட விமர்சனம்

பொதுவாக சீரியல் கில்லர்களைப் பற்றிய படங்கள் அனைத்தும் ஒரே விதமாக இருந்தாலும் ஆர்யன் படம் மற்ற படங்களை விட சற்று மாறுபடுகிறது. "கொலை செய்யும் குற்றவாளி தனக்கு இந்த உலகத்தில் ஒரு நோக்கமிருப்பதாக நம்புகிறார். அதே நேரத்தில் அசாத்திய திறமைசாளியாகவும் இருக்கிறார். வில்லனின் ஒவ்வொரு நகர்வும் துல்லியமாக கணக்கிடப்பட்டு அரங்கேற்றப்படுகின்றன. ராட்சசன் படத்தைப் போல் இப்படத்திலும் தனது கரியரில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு ஓடுகிறார் நாயகன் விஷ்ணு விஷால். ராட்சசன் படத்தின் அருண் கதாபாத்திரத்தைப் போலவே இப்படத்தின் நாயகனும் புத்திசாலியானவன். ஆனால் தனக்கு இருக்கும் மன கஷ்டத்தால் நாயகன் மிக குறைவாகவே மகிழ்ச்சியை வெளிப்படுத்துபவராக இருக்கிறார். வில்லனாக நடித்துள்ள செல்வராகன் படத்தில் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம் அவரது கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் பார்வையாளர்களின் விருப்பம் . நாயகி ஷ்ரத்த ஶ்ரீநாத் கதை நகரும் போக்கில் முக்கிய அங்கமாக இருக்கிறார். 

இது வழக்கமான சீட்டின் நுணியில் உட்கார வைக்கும் த்ரில்லர் படம் கிடையாது. இந்த படத்தில் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் ஒரு சமூக கருத்தும் இருக்கிறது. அதானால் இப்படம் தனித்து நிற்கிறது. பார்வையாளர்களை பயமுறுத்தவோ சுவாரஸ்யத்தில் நகம் கடிக்கவோ இந்த படம் முயற்சிப்பதில்லை . அதனால் ராட்சசன் படம் போல் இருக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் செல்லாதீர்கள் , ஆனால் கிரைம் த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு நல்ல தீணி போடும் படமாக ஆர்யன் படம் இருக்கும் அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கியுள்ள ஆர்யன் படம் வித்தியாசமான சமூக கருத்துள்ள ஒரு கிரைம் த்ரில்லர் " என விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார்