2014-ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் ராம்குமார். அவரது முதல் திரைப்படமே வித்தியாசமான காமெடி திரைப்படமாக அமைந்ததால் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'முண்டாசுப்பட்டி' திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக இந்த கூட்டணியில் உருவான ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படம் 'ராட்சசன்'. இவர்களின் கூட்டணியில் உருவான இந்த ஜானர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது. 



முண்டாசுப்பட்டி


 


ஹாட்ரிக் கூட்டணி: 


இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் ராம் குமார் - நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே வெளியான தகவல் ஒன்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தை கையில் எடுக்கும் இயக்குநர் ராம் குமார் இந்த முறை எந்த ஜானரில் படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்காலிகமா இப்படத்துக்கு VV21 என பெயரிடப்பட்டுள்ளது.   இப்படத்தின் மற்ற அப்டேட்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






தரமான படங்கள்: 


தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் எப்.ஐ.ஆர் இரண்டுமே மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்பதில் லீட் ரோலில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 



ராட்சசன்


 


பிஸி ஷெட்யூல்: 


அது மட்டுமின்றி அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் ஒதுக்கிவைக்கப்பட்டு இருந்தது. தற்போது அப்படத்தின் ரிலீஸில் இருந்த சிக்கல்கள் எல்லாம் விலகி அதுவும் விரைவில் ரிலீஸாக உள்ளது என கூறப்படுகிறது. மேலும் எப்.ஐ.ஆர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பும் விரைவில் வரும் எனவும் தகவல் வெளியானது. 







விஷ்ணு விஷால் போஸ்ட்: 


அந்த வகையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கம் மூலம் ‘ஹாட்டிரிக் காம்போ’ என்ற பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். விஷ்ணு விஷால் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த  முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் திரைப்படங்களை கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படமும் விஷ்ணு விஷாலுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.