தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக இருக்கும் விஷால் தனது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி முழு மூச்சில் நடித்து வருகிறார். ஆர்யா- விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள எனிமி படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது அதன்படி படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று ,அண்ணாத்த , மாநாடு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுடன் தீபாவளி ரேஸில் கலந்துக்கொள்ளவுள்ளது என்பதை நாம் பார்த்தோம். இந்நிலையில் விஷாலின் 31 வது படமான வீரமே வாகை சூடும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. படத்தை து.ப.சரவணன் இயக்க , விஷாலே படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் படத்தின் டீஸ்ர் மற்றும் முதல் சிங்கிள் டிராக் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால் நடிக்கும் அவரது 32 வது படத்தை அறிமுக இயக்குநர் வினோத் இயக்கவுள்ளார்.அது குறித்த அறிவிப்பை முன்னதாகவே பார்த்தோம். இந்நிலையில் படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி சரியாக இன்று (செப்டம்பர் 17) மாலை 5 மணிக்கு விஷாலின் 32 வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.இந்த படத்தை ராணா புரடெக்ஷன் தயாரிக்கவுள்ளது. படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கவுள்ளார். மேலும் நந்தா, பிரபு உள்ளிட்ட நடிகர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
அதே போல விஷால் தனது 33 மற்றும் 34 வது படத்திலும் ஒப்பந்தமாகிவிட்டார். 33 வது படத்தை அறிமுக இயக்குநருக்கே கொடுக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் , திரிஷா இல்லைனா நயன்தாரா, பாகிரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக்ஷன் திரில்லர் கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.படத்தை வருகிற டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். வீரமே வாகை சூடும் படத்தின் ரிலீஸுக்கு பிறகு , சிறிது கால இடைவெளியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே போல விஷாலின் 34 வது படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்த்திக் தங்கவேல் ஜெயம் ரவி நடித்த ’அடங்கமறு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.