மைக்கை பிடிக்க முடியாமல் நடுங்கிய கை..விஷாலுக்கு என்ன ஆச்சு ?

சுந்தர் சி இயக்கத்தில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கு மதகஜராஜா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் கை நடுங்க மேடையில் பேசியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

Continues below advertisement

மதகஜராஜா

இந்த பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் ஏமாற்றமளிக்கும் வகையில் இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. அந்த குறையை போக்கும் விதமாக பொங்கள் ரேஸில் வந்து இணைந்துள்ளது சுந்தர் சி இயக்கியுள்ள மதகஜராஜா. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த இந்த படம் பல்வேறு காரணங்களால் 12 ஆண்டுகள் ரிலீஸாகாமல் நிலுவையில் இருந்து வந்தது. தற்போது பொங்கல் ரிலீஸாக வரும் ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

Continues below advertisement

சிக்ஸ் பேக் வைத்த விஷால் , காமெடியனாக சந்தானம் , வரலட்சுமி , அஞ்சலி , விஜய் ஆண்டனியின் இசை என பொங்கலை உற்சாகமாக கொண்டாட பக்கா பேக்கேஜாக இந்த படம் அமைந்துள்ளது. குறிப்பாக படத்தின் இடம்பெற்றுள்ளன மை டியர் லவ்வர் பாடல் வெளியானபோதே படு வைரலானது. இந்த பாடலை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் பயங்கர ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 

கை நடுக்கத்துடன் பேசிய விஷால் 

ரிலீஸை ஒட்டி மதகஜராஜாவின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விஷால் , இயக்குநர் சுந்தர் சி மற்றும் படத்தின் இசயமைப்பாளர் விஜய் ஆண்டனி கலந்துகொண்டார்கள். அப்போது மேடையில் பேசிய நடிகர் விஷால் மைக்கை கூட பிடிக்க முடியாமல் நடுங்கியது. மேலும் அவரது குரலிலும் தடுமாற்றம் இருந்தது. இதனால் அனைவரும் பதற்றமடைந்தார்கள். 

விஷாலுக்கு கடுமையான வைரல் காய்ச்சல் இருப்பதாகவும் சுந்தர் சி க்காக அவர் இந்த நிகழ்விற்கு வந்திருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. பொதுவாக விஷால் பேசுவதை கேட்டு ட்ரோல் செய்து மீம் போடுபவர்கள் தான் அதிகம். ஆனால் இந்த வீடியோவில் விஷாலின் நிலைமைப் பார்த்து அனைவரும் அவர் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். ஏற்கனவே படத்திற்கு பெரியளவில் வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் காய்ச்சலுடன் வந்து விஷால் ஆடியன்ஸின் சிம்பதியையும் பெற்றுவிட்டார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola