தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம்  ‘மார்க் ஆண்டனி’. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் செய்து இருந்தார் நடிகர் விஷால். அந்த வீடியோவில் '‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை சென்சார் செய்ய தணிக்கை குழு அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் அதை திரையிடுவதற்காக தனியாக ரூபாய் 3.5 லட்சம் மற்றும் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக 3 லட்சம் ரூபாயும் தனிப்பட்ட நபர் ஒருவரின் வாங்கி கணக்குக்கு செய்தியாக குற்றச்சாட்டப்பட்டு இருப்பதாக கூறி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வருக்கு இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். 



நடிகர் விஷால் புகாருக்கு உடனடியாக பதிலளித்த மத்திய அரசுக்கு எக்ஸ் தள பக்கம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.


"மும்பையில் ஊழல் விவகாரம் தொடர்பான இந்த முக்கியமான விஷயத்தில் உடனடி நடவடிக்கைகளைக்காக மிக்க நன்றி.  ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும், தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையில் செல்வதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.  






பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த முயற்சியை உடனடியாக வெளிக்கொணர்வதில் ஈடுபட்டுள்ள அனைவரும் எனது மனமார்ந்த நன்றிகள். ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்னைப் போன்ற ஒரு சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியான உணர்வைத் தருகிறது, ஜெய் ஹிந்த்" என தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார் நடிகர் விஷால்.