சென்னை, வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் வீரமே வாகை சூடும் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 


அதில் பேசிய நடிகர் விஷால், படத்தைப் பற்றிபல்வேறு சுவாரஸ்யத் தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். விஷால் நடிப்பில் உருவாகியுள்ளது 'வீரமே வாகை சூடும்' திரைப்படம். இப்படத்தை இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி உள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 5 மொழிகளில் குடியரசு தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 




இந்நிலையில், படத்தில் நடித்துள்ள நாயகி ரவீனா பற்றி விஷால் பேசினார். ‛‛ ரவீனாவை நான் பரதேசி என்றுதான் கூப்பிடுவேன். என்னைப்போல் யாரும் அவரை இரிடேட் செய்திருக்க முடியாது. அவங்களோட கதாபாத்திரம் மிகவும் கனமானது. அது கதாநாயகியின் கதாபாத்திரத்துக்கு நிகரான வெயிட்டான கேரக்டர். இயக்குநர் பாலா சாரின் அவன் - இவன் திரைப்படத்திற்குப் பிறகு இந்த திரைப்படம்தான் மிகவும் சவாலாக இருந்த திரைப்படம்.


இந்தப் படத்தில் ரவீனா, டிம்பிள், துளசி மூன்று பேரும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இது எனக்கு  32வது படம். இந்தத் திரைப்படத்துக்கு முன்னால் 'எது தேவையோ அதுவே தர்மம்' குறும்படம் பார்த்தேன். அதைப் பார்த்துவிட்டு நான் சரவணனிடம் பேசி ஒரு கதை சொல்லச் சொன்னேன். ஒரு மாதத்தில் ஒரு கதை சொன்னார். அது தான் வீரமே வாகை சூடும். எனக்குப் பாண்டியநாடு படம் திரைக்கதை ரொம்பப் பிடிக்கும். அதன்பின்னர் இந்தப் படத்தின் திரைக்கதை எனக்குப் பிடித்துள்ளது.




எதற்காக புதுமுக இயக்குநர் எனக் கேட்டார்கள்.  புதுமுக இயக்குநர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு இருப்பார்கள் அதனால்தான் அவர்களை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். நான் எப்போ படம் பண்ணாலும் இசை யுவன் சங்கர் ராஜா தான். அதில் தெளிவாக இருப்பேன். நிறைய படங்களில் அவரது இசை மட்டுமே என்னைக் காப்பாறியுள்ளது. இந்தப் படத்திலும் இசை பிரம்மாண்டமாக இருக்கிறது. எனக்கும் யுவனுக்கும் இடையேயான நட்பு தொழிலையும் தாண்டியது. இன்ஷா அல்லா. அது ஒரு அழகிய நட்பு,’’ 


இவ்வாறு விஷால் பேசினார்.


 


ரொம்ப 'ராவான' படம்:


தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “வீரமே வாகை படத்தில் இரண்டு பாடல்கள் இருக்கின்றன. இந்தப் படம் ரொம்ப ராவான மேக்கிங் கொண்டது. அதனால் பேக்கிரவுண்ட் மியூசிக்கில் நிறைய சவால்கள் இருந்தன. இன்னும் பேக்கிரவுண்ட் ஸ்கோர் போய்க் கொண்டிருக்கிறது. படத்தில் விஷால் நடிப்பு ரொம்பவே சிறப்பாக இருக்கிறது” என்று கூறினார்.