பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் "விருமன்"... 2 வார முடிவிலும் பிளாக் பஸ்டர் ஹிட் தொடர்கிறது
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான "விருமன்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.
பிளாக் பஸ்டர் ஹிட்:
2D என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்த இப்படம் சுமார் 400 திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டமாக சமீபத்தில் வெளியானது. இரண்டு வார முடிவில் "விருமன்"திரைப்படம் ஒரு பாக்ஸ் ஆபிசில் பிளாக் பஸ்டர் படமாக வெற்றிபெற்றுள்ளது. கமர்சியல் ரீதியாகவும் நல்ல வசூலை எட்டியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக 2D என்டேர்டைன்மெண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் "விருமன்" படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை ஒரு போஸ்டர் மூலம் பகிந்துள்ளனர்.
"கொம்பன்" தொடங்கி "விருமன்" வரை:
நடிகர் கார்த்தியை வைத்து இயக்குனர் முத்தையா "கொம்பன்" திரைப்படத்தை இயக்கியிருந்தார். கிராமத்து பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை என்பதால் அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து "விருமன்" திரைப்படத்தின் மூலம் இருவரும் ஆறு வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளனர்.
குடும்ப படம் :
"விருமன்" திரைப்படம் மூலம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். ஒரு கிராமத்து கதைக்கு ஏற்ற ஒரு முகமாக இருப்பது இப்படத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. ரசிகர்களையும் தனது முதல் படத்திலேயே கவர்ந்து விட்டார். மேலும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிகர்களின் நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்டவை திரையுலத்தினரால் பாராட்டுகளை குவித்து வருகிறது. இது ஒரு குடும்ப பாங்கான திரைப்படம் என்பதால் மக்களை எளிதில் கவர்ந்து விட்டான் "விருமன்". யுவன் ஷங்கர் ராஜா இசை படத்திற்கு பக்கபலம் மற்றும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் வெளியான விருமன், தற்போது வெளியான திருச்சிற்றம்பலம் படத்தால் சிக்கலை சந்தித்துள்ளதா என்கிற கேள்வி எழுந்த நிலையில் , 2டி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.