விருமன் படம் வெளியான மூன்றாம்  நாளில் பாக்ஸ் ஆபிஸில் 9.1 கோடி வசூல் செய்து அதிக வசூல் பெற்ற படங்களின் வரிசையில் எட்டாவது இடத்தை பெற்றுள்ளது. கார்த்தியின் ரிலீஸ் தேதியில் அதிக சாதனை படைத்தது விருமன் மட்டும் தான்.





பருத்திவீரன் படத்துக்கு பின் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த கார்த்தி, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் கிராமத்துக்கு நாயகனாக களமிறங்கிய படம் தான் கொம்பன். முத்தையா இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீசான இப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்ததோடு, கார்த்தியின் கெரியரில் முக்கிய படமாகவும் அமைந்தது.


இதன் பின்னர் 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நடிகர் கார்த்தி, மீண்டும் முத்தையா உடன் கூட்டணி அமைத்துள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து இருக்கிறார். இப்படம் மூலம் அவர் ஹீரோயினாகவும் அறிமுகமாகி உள்ளார்.






தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன, இந்த வரிசையில் இப்போது விருமன் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.




கார்த்தி, அதிதி‌ ஷங்கர்,சூரி, ஆர்.கே.சுரேஷ், பிகில் பாண்டியம்மாள், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி புரொடக்ஷனில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வெளியாகி உள்ளது விருமன் திரைப்படம்.


படம் வெளியான மூன்றாம் நாளில் 8.45 கோடியாகவும் , மூன்றாவது நாளில் 9.1 கோடியாகவும் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சன் அதிகரித்துள்ளது. விருமன் திரைப்படம் மூன்று நாட்களில் மொத்தம் 25.75 (8.1cr+ 8.45cr+9.1cr) கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.


வார இறுதி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 விடுமுறை என்பதால் முதல் வாரத்தின் படத்தின் வசூல் சீராக இருக்கும் என்று படக்குழு காத்திருக்கின்றனர். இப்படம் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது.


விருமன் படம் வெளியான முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் 8.2 கோடி வசூல் செய்து அதிக வசூல் பெற்ற படங்களின் வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளது. கார்த்தியின் ரிலீஸ் தேதியில் அதிக சாதனை படைத்தது விருமன் மட்டும் தான் என்பது குறிப்பிடதக்கது.


விருமன் திரைப்படம் கிராமங்களில் நன்றாக ஓடியதாக கூறப்படுகிறது. அதேபோல நகரங்களிலும் வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு சென்னை திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.