கிரிக்கெட் உலகிலும் சரி, பாலிவுட் உலகில் சரி அனைவராலும் ரசித்துக் கொண்டாடப்படும் க்யூட் ஜோடி விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா.


டேட்டிங் டூ காதல்


2013ஆம் ஆண்டு ஒரு விளம்பரப்படத்துக்காக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நிலையில், இருவரும் காதலில் விழுந்தனர். விளம்பரத்திலேயே இவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை ஈர்த்த நிலையில் இருவரும் அதன் பின்னர் டேட் செய்து வருவதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கின.


அதன்பின் விராட் கோலி கிரிக்கெட் விளையாட்டில் கலந்துகொள்ள வருகை தரும் நகரங்கங்களில் அனுஷ்காவும், அனுஷ்காவின் படப்பிடிப்பு தளங்களில் விராட்டும் தென்படத்தொடங்கிய நிலையில், இவர்கள் இருவருமே தங்கள் காதலை உறுதி செய்யவில்லை.


காதலை உறுதி செய்த விராட் கோலி




ஆனால்  2014 நவம்பர் மாதம் ஸ்ரீலங்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்த கோலி, பெவிலியனிலிருந்த அனுஷ்கா ஷர்மாவை நோக்கி ஃப்ளையிங் கிஸ்ஸை பறக்கவிட்டு தங்கள் காதலை உறுதி செய்ய, அதன் பின் இருவரும் காதல் பறவைகளாக உலாவரத் தொடங்கினர்.


அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் இருவரும் தங்கள் காதலைப் பரிமாறிக் கொள்ளத் தொடங்கிய நிலையில், மற்றொரு புறம் விராட் தொடர்ந்து வந்த சில தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அனுஷ்கா விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டார். 


பக்கபலமாக விளங்கிய அனுஷ்கா


அனுஷ்கா விராட்டின் கிரிக்கெட் கரியருக்கு கவனச்சிதறலாக இருக்கிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சிக்கத் தொடங்கிய நிலையில், இவர்களுக்கு விராட் கோலி அழுத்தமாக பதிலடி கொடுத்துடன் , அனுஷ்கா தான் தன் வாழ்வின் மிகப்பெரும் பாசிட்டிவிட்டி என்றும் தெரிவித்து விமர்சகர்களின் வாயை அடைத்தார்.


அதன் பின் தொடர்ந்து பொது இடங்களில் வலம்வரத் தொடங்கிய விராட் - அனுஷ்கா ஜோடி, 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி கோலாகலமாக இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். 




தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் மத்தியில் அனுஷ்கா கருவுற்றிருப்பதை விராட் - அனுஷ்கா தம்பதி அறிவித்தனர். தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் தங்கள் குழந்தைக்கு வாமிகா எனப் பெயர் சூட்டினர்.


10 ஆண்டு காதல் வாழ்க்கை


இந்நிலையில் அனுஷ்கா - விராட் ஜோடி தங்கள் காதல் வாழ்வின் 10ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் இருவரது ரசிகர்களும் இவர்களை வாழ்த்தி வருகின்றனர்.


இந்நிலையில் முன்னதாக விராட் கோலி தனக்கும் அனுஷ்கா ஷர்மாவுக்கும் இடையேயான முதல் உரையாடல் பற்றி நினைவுகூர்ந்துள்ளது இவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஏபி டி வில்லியர்ஸ் உடனான ஒரு நேர்காணலில் அனுஷ்காவை முதன்முறை சந்தித்தது குறித்து மனம் திறந்துள்ள விராட் கோலி  தான் மிகவும் பதட்டமாக உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.


அனுஷ்காவுடனான முதல் மீட்டிங்: மனம் திறந்த கோலி




முதன்முறை அனுஷ்காவுடன் விளம்பரத்தில் நடித்தது பற்றி கூறியுள்ள விராட், "இது 2013 ஆம் ஆண்டு நடந்தது. எனக்கு நினைவிருக்கிறது, ஜிமாபாப்வே சுற்றுப்பயணத்திற்கு நான் கேப்டனாக நியமிக்கப்பட்டேன். எனது மேலாளர் என்னிடம் வந்து நான் அனுஷ்கா ஷர்மாவுடன் நடிக்கப்போவதாகக் கூறினார். இதைக் கேட்டு நான் மிகவும் பதட்டமடைந்தேன். எப்படி நான் இதை செய்யப் போகிறேன், நான் மிகவும் பதட்டமாக இருந்தேன்" 


அவரை எப்படி அணுகுவது என்று எனக்குத் தெரியவில்லை. பதட்டத்தில் அவரது ஹீல்ஸைப் பார்த்து நான் ஒரு கமெண்ட் செய்தேன். மிகவும் மோசமான உரையாடல் அது.


ஆனால் அதன்பின் அனுஷ்காவுடன் அமர்ந்து பேசிய பின், அவர் மிகவும் சாதாரண நபர் என்றும், எங்கள் பின்புலங்கள் ஒரே மாதிரியானவை என்றும் தெரிந்துகொண்டேன். அதன் பின் நாங்கள் நல்ல நண்பர்களாகி டேட்டிங் செல்லத் தொடங்கினோம், உடனடியாக இவை நிகழவில்லை. நாங்கள் நீண்ட காலம் எடுத்துப் பேசினோம், நாங்கள் ஏற்கெனவே டேட்டிங் செல்வதாக நான் உணரத் தொடங்கிவிட்டேன், நாங்கள் சில மாதங்கள் ஒன்றாக வலம் வந்தோம்.


என்னைப் பற்றி உணர்ந்த அனுஷ்கா...


எனக்கு நினைவிருக்கிறது, நான் ஒருநாள் அவருக்கு இந்த மெசேஜை அனுப்பினேன்.  நான் சிங்கிளாக இருக்கும்போது இதையெல்லாம் செய்தேன் என அனுஷ்காவுக்கு மெசேஜ் அனுப்பினேன், அதற்கு அனுஷ்கா நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என பதிலளித்தார். நான் என் மனதிற்குள் நாங்கள்  ஏற்கெனவே டேட்டிங் செல்வதாக நினைத்திருந்தேன். ஆனால் அனுஷ்கா இப்படி கேட்டது ஒரு மாதிரி ஆகிவிட்டது. 


ஆனால் அதன் பின் நான் ஒரு நல்ல குணாதிசயம் கொண்டவன் என அனுஷ்கா உணரத் தொடங்கிவிட்டார்” என விராட் தெரிவித்துள்ளார்.