சேலை ஒவ்வொரு இந்தியப் பெண்ணையும் மிக நளினமாகக் காட்டக்கூடிய நேர்த்தியான அழகான உடை. இந்தியா மட்டுமின்றி, எளிமையான புடவை ரகங்கள் இந்த சமூக ஊடகக் காலத்தில் உலகளவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. அண்மையில் ஜப்பானிய இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் ஒருவர் அழகான புடவைகளை அணிந்திருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது வைரலான தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்த ஹம் தில் தே சுகே சனம் படத்தின் பிரபலமான உரையாடலையும் அவர் மீண்டும் உருவாக்கியுள்ளார். "ஜப் மைன் தையர் ஹோ கர் ஆவுங்கி நா, தப் தேக்னா கைசே ஹோஷ் உத்தே ஹை தும்ஹாரே" என்று வசனத்துக்கு உதட்டை ஒத்திசைக்கும் மாயோ ஜப்பான் என்கிற அந்தப் பதிவர், மூன்று அழகான புடவைகளில் அவரது வீடியோவில் வலம் வருகிறார்.


இதுதவிர தீபிகா படுகோன் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தின் வசனத்தையும் பேசியுள்ளார். 






 






அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில், அவர் தன்னை ஒரு வீடியோ கிரியேட்டர் என்றும், 115K இன்ஃப்ளூயன்ஸர்களைக் கொண்டிருப்பதாகவும் விவரிக்கிறார். அவர் ஹிந்தி மொழியில் பட்டம் பெற்றுள்ளதாக அவரது ஃப்ரொபைல் கூறுகிறது. பாலிவுட் பாடல்கள் மற்றும் உரையாடல்களின் நடன வீடியோக்களையும் அவர் உருவாக்குகிறார். இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்துள்ள அவர், “புடவை ஒரு பெண்ணை அழகாக்குகிறது!!! நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்தானே?" எனக் கேட்கிறார்.


ஒப்புக்கொள்கிறோம்தான்!