Watch Video: கிராமத்தில் புகுந்து கம்பீரமாக எதிரில் வந்த சிங்கம்… அசையாமல் நின்ற ஸ்கூட்டர் ஜோடி… வீடியோ

ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருக்கும் பெண் பயத்தில் ஏதோ உளருவதும் பயத்தில் சிரிப்பதுமாய் ஏதோ பேசிக்கொண்டிருக்க, அசையாமல் வண்டியை வைத்துக்கொண்டு நிற்கிறார் வண்டியை ஓட்டுபவர்

Continues below advertisement

சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது சிங்கம் உங்கள் முன்னே வந்தால் என்ன செய்வீர்கள்? அப்படி ஒரு வீடியோதான் தற்போது வைரல் ஆகி வருகிறது. காட்டுக்கு ராஜாவான சிங்கம் மிகவும் ஆபத்தான விலங்கு. அதன் வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தை கருத்தில் கொண்டே, இது காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. சிங்கம் முன்னால் தோன்றினால், காட்டு விலங்குகளே அஞ்சி ஓடும். அப்படி இருக்கும் போது, மனிதர்கள் முன்னால் தோன்றினால், நம் நிலை என்ன சிந்தித்து பார்த்தாலே பயமாக இருக்கிறது அல்லவா. இது போன்ற ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளியில் காணப்படுகிறது. இந்த காணொளியில் ஒரு நபர் ஸ்கூட்டியில் பயணிக்கிறார், அப்போதுதான் காட்டில் சிங்கம் ஒன்று ஸ்கூட்டியின் முன் வீரு நடை போட்டுக் கொண்டு வருகிறது.

Continues below advertisement

ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருக்கும் பெண் பயத்தில் ஏதோ உளருவதும் பயத்தில் சிரிப்பதுமாய் ஏதோ பேசிக்கொண்டிருக்க, அசையாமல் வண்டியை வைத்துக்கொண்டு நிற்கிறார் வண்டியை ஓட்டுபவர். காரில் சென்று காட்டு விலங்கிடம் சிக்கும் பல வீடியோக்கள் கண்டிருப்போம், ஆனால் ஸ்கூட்டரில் விலங்கு முன்னே வந்தால் அதை விட ஆபத்து வேறு ஒன்றில்லை அல்லவா. அதனாலேயே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. காட்டின் நடுவில் உள்ள சாலையில் ஸ்கூட்டி ஓட்டிச் செல்லும் நபர் திடீரென வாகனத்தை நிறுத்துகிறார். அவருக்கு முன்னால் ஒரு உயரமான சிங்கம் வருகிறது. சிங்கம் அவருக்கு முன்னால் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென அங்கிருந்து வேறு பாதையில் திரும்பி இவர்கள் நிற்பதை சிறிதும் கண்டுகொள்ளாமல் வேறு வழியில் எதையோ தேடிக்கொண்டு செல்கிறது.

இப்படியே சிங்கம் ஸ்கூட்டி ஓட்டுனரை தாக்காமல் அமைதியாக சென்று விடுகிறது. சிங்கம் தன்னை வேட்டையாடமல் விட்டுச் சென்றதை நினைத்து அந்த நபர் நிம்மதி பெருமூச்சு விடுகிறார். இந்த வீடியோவை இதுவரை 49 ஆயிரம் பேர் கண்டுள்ளனர். 2500க்கும் மேற்பட்ட லைக்குகள் பெற்றுள்ளது. இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுஷாந்த நந்தா வெளியிட்டுள்ளார். இந்த விடியோவிற்கு "கிராம சாலைகளில் சக பயணிகள், இந்தியாவில் எடுக்கப்பட்ட விடியோ" என்று எழுதியுள்ளார். கமென்டில் பலர் அந்த ஜோடியின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர். இப்படி முன்னாள் சிங்கம் வரும்போது அசையாமல் நிற்பது மிகவும் கடினமான விஷயம். அவர்கள் அசைந்திருந்தால் கண்டிப்பாக தாக்கப்பட்டிருப்பார்கள் என்று பேசி வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola