இலங்கையின் இசைத் துறையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவின் ´மெனிகே மகே ஹிதே´ என்ற பாடல் யூ டியூபில் 185 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இலங்கையில் இருந்து யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை தாண்டிய முதல் பாடல் இதுவாகும். அந்த வைரல் பாடல் பாடல் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அமெரிக்க வீதிகளில் வயலினில் அந்த இசை இசைக்கப்பட்ட வீடியோக்கள் எல்லாம் வைரலாகி இருந்தது அனைவரும் அறிந்த விஷயம். அப்படி பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆன பாடலை பாடிய யோஹானி உலகெங்கும் புகழடைந்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைத்து பேசியது தொடங்கி, இந்திய தூதரக நியமிக்க பட்டது என வைரலாக இருந்தார். தற்போது அந்த பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடிய விடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 



பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் வரை, அனைவரும் இந்த மெல்லிசைப் பாடலை ரசித்து தள்ளிய நிலையில், தற்போது ஒரு புதிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு இந்திய பெண் ஒருவர் 'மெணிகே மகே ஹிதே' பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடுவதைக் காணமுடிகிறது. அந்த பெண்ணின் நடனம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது. வைரலான இந்த வீடியோவை படனம் ஆடிய தீபாலி வசிஷ்டாவே இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். தீபாலி ஒரு தொழில்முறை பெல்லி டான்சர் ஆவார்.



தீபாலி வசிஷ்டாவுக்கு இன்ஸடாகிராமில் 71k க்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டுள்ளார். தீபாலி இன்ஸ்டாகிராமில் தனது மற்ற பெல்லி டான்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். சமீபத்திய வைரல் வீடியோவில், தீபாலி வைரலான பாடலான 'மெனிகே மகே ஹித்தே' வுக்கு பளீரென்ற நடத்தை அளிப்பதை காணலாம். "இந்தப் பாடல் என்னை இப்படி செய்ய வைத்தது" என்று வீடியோவிற்கு தலைப்பு எழுதியுள்ளார். தீபாலி இந்த வீடியோவிற்கு நல்ல கமெண்டுகளை பெற்றுள்ளார். கமென்ட் பகுதி "Good", "Awesome" போன்ற வார்த்தைகளால் நிரம்பியுள்ளது.