தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு மல்டி டேலண்டெட் பர்சனாலிட்டி வினோதினி வைத்தியநாதன். எங்கேயும் எப்போதும் திரைப்படம் மூலம் நடிகையாக பிரபலமான இவர் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். தற்போது காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ். அவ்வப்போது சமூகம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பவர். இவரது பல விமர்சனங்கள் சர்ச்சையை கூட ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பன்முக வித்தகி:
சினிமா, நாடகம், வெப் தொடர் போன்றவற்றில் நடிப்பது மட்டுமின்றி ஸ்க்ரிப்ட் எழுதுவதும் என பல திறமைகளை கொண்ட இவரின் பேச்சுதிறமையோ அபாரம். எதை பற்றி வேண்டும் என்றாலும் அவரிடம் பேசலாம். இப்படி பல அவதாரங்களை கொண்டு இருந்தாலும் எதுவுமே தெரியாததை போல அமைதியாக இருப்பவர். சோசியல் மீடியாவில் இவர் பகிரும் வீடியோ மிகவும் வைரலாவதும் உண்டு. தனது அப்பாவுடன் வசித்து வரும் விநோதினியின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் எப்படி இருந்தது என்பது குறித்து போஸ்ட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனிமை பொங்கல் எப்படி இருந்தது :
வினோதினியின் அப்பா சிங்கப்பூரில் இருக்கும் மகன் வீட்டிற்கு செல்ல சிங்கிளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். சமையல் செய்பவர் சண்டே லீவு எடுத்துக் கொண்டால் தானே கோதாவில் இறங்கி சர்க்கரைப் பொங்கல், ரசம், வாழைக்காய் பொரியல், சாதம், பருப்பு, வடகமென ஜமாய்த்துள்ளார். சமைத்த உணவை நாய், பூனை, காக்கை, பக்கத்துவீட்டு நண்பர் என விநியோகம் செய்து விட்டு புதிதாக ஒரு உறுதியையும் எடுத்துக்கொண்டுள்ளார். பாட்டனின் சொல்படி அவரையும் மிஞ்சும் படி இந்த வருடம் முடிந்தவருக்கெல்லாம் முடிந்தவரையில் உணவளிக்க இந்த பிரபஞ்சம் அருள வேண்டும் என கேட்டு கொண்டு அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
வினோதினியின் இந்த போஸ்ட் சற்று விநோதமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற அந்த கொள்கை லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இது கொஞ்சம் லேட் போஸ்ட்தான். ஆனால் வினோதினியின் ரசிகர்களுக்கு அவருடைய இன்ஸ்டா ரீல்கள் எப்போதும் ட்ரீட்தான்.