Thangalaan : ஒரே நாளில் மோதிக்கொள்ளும் தங்கலான் மற்றும் வணங்கான்...ரிலீஸ் தேதி இதுதான்

விக்ரம் நடித்துள்ள தங்கலான் மற்றும் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Continues below advertisement

தங்கலான் , இந்தியன் 2 , கங்குவா  என வரிசையாக  பெரிய பட்ஜெட் தமிழ் படங்கள் ரிலீஸூக்கு காத்திருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு ஐந்து மாதங்கள் கழிந்துள்ள நிலையில் ஒரு சில படங்கள் மட்டுமே வசூல் ரீதியான வெற்றியை பெற்றுள்ளன. இதில் அரண்மனை 4 , கருடன் உள்ளிட்ட படங்கள் அடக்கம். பல்வேறு பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில் இந்தப் படங்களின் மேல் பெருமளவில் எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் மற்றும் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் ஆகிய இரு படங்கள் முக்கியமானவை.

Continues below advertisement

இரு படங்களும் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கலான்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் கோலிவுட் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வரும் படங்களில் ஒன்று. விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு தங்கலான் படத்தின்  படப்பிடிப்பு தொடங்கியது. முதற்கட்டமாக சென்னை, பின் ஆந்திராவில் கடப்பா, ஒகேனக்கல் , மாலத்தீவுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. கோலார் தங்க வயல்களில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஆங்கிலேயர்கள் அங்கிருந்த பழங்குடிகள் மீது நடத்திய வன்முறைகளும் அவர்களை எதிர்த்து போராடிய பழங்குடி சமூதாயத்தின் கதையை படமாக்கியுள்ளார் பா. ரஞ்சித். கடந்த 2023ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது, இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. முதலில் ஜனவரி , பின் ஏப்ரல் என படத்தை சரியான நேரத்தில் வெளியிட வேண்டும் என்று படக்குழு கவனமாக இருந்த காரணத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் .

வணங்கான்

பாலா இயக்கத்தில்  அருண் விஜய்  நடித்துள்ள திரைப்படம் வணங்கான். பாலாவின் தயரிப்பு நிறுவனமான 'பி ஸ்டுடியோஸ் ' மற்றும் சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ்'  இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.  ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். வணங்கான் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

Continues below advertisement
Sponsored Links by Taboola