விக்ரம் படத்திற்கு மட்டும் இவ்வளவு கொண்டாட்டம் ஏன் என்பதற்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இதையடுத்து விக்ரம் படக்குழு இப்படத்தின் வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:




கேள்வி: நிறைய வெற்றிப்படங்கள் உங்கள் நடிப்பில் வெளியாகிருக்கு. ஆனால் விக்ரம் படத்தை மட்டும் இவ்வளவு விமரிசையாக கொண்டாடுவது ஏன்?
பதில்: என் நடிப்பில் நிறைய வெற்றிப்படங்கள் வந்திருப்பது உண்மைதான். ஆனான் அதை கொண்டாட எனக்கு கேப் கிடைக்கும். ஆனால் பல்வேறு மொழிகளில் வெளியாகி அனைத்து இடங்களிலும் விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 




கேள்வி: இந்த படத்திற்கு மட்டும் கார், வாட்ச் எல்லாம் கொடுக்கிறீங்க. ஏன்?
பதில்: வெற்றி படங்கள் நிறைய வந்திருக்கு. நான் அப்போதும் கலைஞர்களுக்கு செய்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் நீங்கள் கண்டுகொள்ளவில்லை. அதாவது வெளியில் தெரியவில்லை. இப்போது தும்முனா கூட செய்தி போடுறீங்க. அதனால் கார், வாட்ச் கொடுப்பது வெளியில் தெரிகிறது. 


கேள்வி: விக்ரம் குழந்தை நல்லபடியா இருக்கு. மக்கள் நீதி மய்ய குழந்தை எப்படி இருக்கு?
பதில்: அதற்கு 5 வயது ஆகுது. நல்லா இருக்கு.


கேள்வி: வரும் தேர்தலில் போட்டியிடுவீர்களா? 
பதில்: போட்டியிடுவேன்


கேள்வி: மருதநாயகம், சபாஷ் நாயுடு வருமா? 
பதில்: வருவதற்காக வாய்ப்புகள் இருக்கு.