தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த நட்சத்திர ஜோடிகள் பலர் உள்ளனர். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே தன்னுடன் நடிக்கும் நடிகைகள் மீது நடிகர்கள் காதல் வயப்பட்டு பின்னர் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் எம்.ஜி.ஆர் - ஜானகி, ஜெமினி - சாவித்திரி, விஜயகுமார் - மஞ்சுளா, தொடங்கி... சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி, கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் என சொல்லி கொண்டே போகலாம். இந்த லிஸ்டில் தற்போது ஒரு புதிய காதல் ஜோடி இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

அனுபமா பரமேஸ்வரன்:

'டிராகன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அனுபமா பரமேஸ்வரன் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில், உருவாகி வரும் 'பைசன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திம் துருவ் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருவ் விக்ரமுடன் டேட்டிங்:

இந்தப் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக, நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். இருவரும் இந்த படத்தில் இணைந்து நடிக்கும் போது, ஆரம்பத்தில்  நட்பாக பழகிய இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இருவரும் டேட்டிங் செய்ய துவங்கியுள்ள நிலையில், லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொள்ளும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

ஸ்போட்டிபை என்ற மியூசிப் ஆப் மூலமாக இருவரும் அப்படி முத்தக் காட்சியில் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக இருவரும் இருக்கும் புகைப்படம் நீக்கப்பட்டுவிட்டது. உண்மையில் இருவரும் காதலிக்கிறார்களா? அல்லது பைசன் படத்தின் காட்சிக்கா இந்த காட்சி எடுக்கப்பட்டதா என்பது குறித்த எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. எனினும் ரசிகர்கள் விக்ரமுக்கு மருமகள் ஒரு நடிகையா என சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதே போல், துருவை விட அனுபமா 2 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.