லவ் மேரேஜ் திரைப்பட விமர்சனம்
ஷன்முக பிரியன் இயக்கி விக்ரம் பிரபு , சுஷ்மிதா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் லவ் மேரேஜ். மீனாட்சி தினேஷ், அருள் தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம், கஜராஜ், கோடாங்கி வடிவேலு, வெற்றியாளர் ராமச்சந்திரன், யாசர் ஆகியோர் பிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் சிறப்பு திரையிடல் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்
முதல் பாதி
ஒரு எளிமையான ஃபேமிலி என்டர்டெயினராக தொடங்குகிறது லவ் மேரேஜ் திரைப்படம். மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அடக்கமான ஒரு மாப்பிள்ளையாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு . மிக எளிமையான பார்வையாளர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடிய தருணங்களால் கதை நகர்கிறது. கதாபாத்திரங்களையும் நம்மால் தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது. முதல் பாதியின் முடிவில் பிரச்சனை தொடங்குகிறது. ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்தின் மூடை உயர்த்துகிறது.
இரண்டாம் பாதி
இரண்டாம் பாதியில் இருந்து கதை வேகமெடுக்கிறது. முதல் பாதியைக் காட்டிலும் விக்ரம் பிரபுவின் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் முக்கியத்துவம் பெறுகிறது. சின்ன சின்ன உணர்ச்சிகளை கொண்டு கதை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. யூகிக்கக் கூடிய கதை என்றாலும் ஆபாசமோ , வன்முறை காட்சிகளோ இல்லாமல் ஃபேமிலி ஆடியன்சிற்கு ஏற்ற மாதிரியான ஒரு படம் லவ் மேரேஜ். ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு ஒரு பெரிய பக்கபலம் என்றே சொல்லலாம்.