விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 515ஆவது எபிசோடில், செந்தில் தன்னுடைய தம்பியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லும் காட்சியுடன் தொடங்குகிறது. அதன் பிறகு இருவரும் இணைந்து பணத்திற்கு ஏதேனும் வழி கிடைக்கிறதா என்று யோசிக்க துவங்குகிறார்கள்.

Continues below advertisement

அப்போது தான் கதிர் ஒரு பிளான் சொல்கிறார். அதாவது சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்துவிடலாம். அதாவது, அத்தையிடம் சென்று இதைப் பற்றி பேசலாம் என்று முடிவெடுத்து இருவரும் அத்தை வீட்டிற்கு செல்கின்றனர்.

அங்கு அத்தையும் இல்லை மாமாவும் இல்லை, மாமாவின் மகன் சதீஷூம் இல்லை. பிறகு வேறு வழியில்லாமல் அத்தைக்கு போன் போட்டு பேச, அதனால் எந்த பலனும் இல்லை என்பதை இருவரும் புரிந்து கொண்டு வேறு இடங்களில் பணத்திற்காக முயற்சி செய்கின்றனர். அப்படி கதிர் தனது பணக்கார நண்பனை சென்று சந்தித்தார். அவரிடம் உதவி கிடைக்குமா என்று முயற்சி செய்தார். ஆனால் கதிர் பெயரில் எந்த சொத்தும் இல்லாத நிலையில் அவரால் முயற்சி செய்து முடியவில்லை.

Continues below advertisement

இதற்கிடையில் தங்கமயில் மற்றும் சரவணன் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகிறது. அதில், தங்கமயில் தனது கணவனை எந்தளவிற்கு ஐஸ் வைத்து அவரது மனதை மாற்றுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏற்கனவே அல்வா சாப்பிடும் தங்கமயில் மிக்‌ஷர் வேண்டுமென்று கேட்கவே சரவணனனும் சென்று வாங்கி வந்து கொடுக்கிறார்.

தொடர்ந்து மீனா மற்றும் சரவணன் தொடர்பான காட்சிகள் காட்டப்படுகின்றன. இதில், ஏற்கனவே நான் சொன்னேன் நீங்கள் தான் கேட்கவே இல்லை. அப்படியிருந்தும் நீங்கள் ரூ.10 லட்சம் பணத்தை கொண்டு சென்று என்னுடைய அப்பாவிடம் கொடுத்துவிட்டீர்கள். சரி வேலை கிடைத்துவிட்டதா என்றால் இல்லை. எப்போது வேலை கிடைக்கும் என்பது பற்றியும் தெரியவில்லை என திட்டுவது போல் புலம்புகிறார்.

மேலும், என்னுடைய அப்பா எனக்கு வேலைக்கும் பணம் கொடுக்க சொன்னார். ஆனால், நான் தான் முடியாது என்று சொல்லி படித்து பாஸ் பண்ணி அரசு வேலை வாங்குங்கள் என சொன்னேன். நீங்களும் இன்னும் ஒன்னு, ரெண்டு எக்ஸாம் எழுதினால் வேலை கிடைத்திருக்கும் என சொல்கிறார். அதே போல் எவ்வளவோ முயற்சி செய்தும், அவர்கள் இருவராலும் ரூ.10 லட்சம் பணத்தை பிரட்டமுடியவில்லை.

இதற்கிடையில் நாளைய புரோமோ ஒன்றும் ஒளிபரப்பாகிறது. அதில், ரூ.10 பணம் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டார்கள். அப்போது பாண்டியன்ம் செந்திலிடம் பணத்தைப் பற்றி கேட்க, அவரோ இல்லை என்பது போன்று பேசுகிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 515ஆவது எபிசோடு முடிவடைகிறது. இனி நாளை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதில், கதிர் அல்லது மீனா இருவரில் யாரேனும் ஒருவர் ரூ.10 லட்சம் பணத்தை கொண்டு வந்து தருவார்களா என்பது தான் பரபரப்பில் உச்சம்.