PS 1 Pre-Release Event: செண்டமேளம் வாசிக்கும் ஆதித்ய கரிகாலன்.. திருவனந்தபுரத்தில் கோலாகலமாக நடந்த PS-1 ஃப்ரீ ரிலீஸ்..

திருவனந்தபுரத்தில் நடைபெறும் PS 1 ஃப்ரீ ரிலீஸ் விழாவில் கலைஞர்களுடன் சேர்ந்து செண்டமேளம் வாசித்த நம்முடைய ஆதித்ய கரிகாலன். சீயான் விக்ரமோடு இணைந்து செண்டமேளம் வாசித்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. 

Continues below advertisement

பொன்னியின் செல்வன் பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. செப்டம்பர் 30-ஆம் வெளியாக தயாராக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான புரோமாஷனுக்காக இந்திய முழுவதும் சுற்றிவர தயாராகிய படக்குழுவினர் இன்று முதல் தங்களின் பயணத்தை தொடங்கி விட்டார்கள். 

Continues below advertisement

 

 

திருவனந்தபுரத்தில் PS 1 கோலாகலம்:  

முதலில் திருவனந்தபுரத்தில் இருந்து தங்களின் புரோமாஷனை தொடங்கியுள்ளனர் படக்குழுவினர். தற்போது திருவனந்தபுரத்தில் ஃப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளனர் PS 1 படக்குழுவினர். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி  உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கேரளாவில் இந்த விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, அவ்வப்போது அங்கிருந்து அப்டேட்கள் வந்த வண்ணமாக உள்ளன. 

செண்டமேளம் வாசித்த விக்ரம்: 

திருவனந்தபுரத்தில் நடைபெறும் PS 1 ஃப்ரீ ரிலீஸ் விழாவில் செண்டமேளம் வாசிக்கப்பட்டது. கலைஞர்கள் மட்டுமின்றி நம்முடைய ஆதித்ய கரிகாலனும் அவர்களோடு சேர்ந்து செண்டமேளம் வாசித்தார். இது அங்கு கூடி இருந்த ரசிகர்களை குதூகலப்படுத்தியது. மேலும் சீயான் விக்ரமோடு இணைந்து செண்டமேளம் வாசித்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. 

மிகவும் சுவாரஸ்யமாக நடைபெறும் இந்த PS 1 லான்ச் விழாவில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டு தங்களின் அபிமான நட்சத்திரங்களையும் தென்னிந்தியாவின் ஐகான் இயக்குநர் மணிரத்னத்தையும் காண திரளாக கூடியிருக்கிறார்கள்.  

அடுத்து என்ன பிளான் :

திருவனந்தபுரத்தை தெடர்ந்து PS 1 படக்குழுவினர் செப்டம்பர் 22ம் தேதியன்று பெங்களூரிலும், 23ம் தேதி ஹைதராபாத்திலும், 24ம் தேதி மும்பையிலும், 26ம் தேதி டெல்லியிலும் ப்ரோமோஷன் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.   

மில்லியன் வியூஸை கடந்த PS 1 ட்ரைலர் :

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ்ராஜ்  உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் ரவி வர்மன். சமீபத்தில்தான் சென்னையில் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக  நடைபெற்றது. படத்தின் ட்ரைலர் வெளியான உடனேயே மில்லியன் கணக்கில் வியூஸ் பெற்றது. ட்ரைலர் மற்றும் பாடல்களே திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளபோது படத்திற்கான எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பது சொல்லவே தேவையில்லை. அந்த நாளுக்காக மிக மிக ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள். 

Continues below advertisement
Sponsored Links by Taboola