நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத்பாசில் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தனர்.
கடந்த 3-ந் தேதி வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்ததையடுத்து, படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, விக்ரம் திரைப்படம் அமெரிக்காவில் ரூபாய் 10.65 கோடியையும், இங்கிலாந்தில் ரூபாய் 2.78 கோடியையும், ஆஸ்திரேலியாவில் ரூபாய் 2.60 கோடியையும், நியூசிலாந்தில் ரூபாய் 24 லட்சத்தையும் வசூல் செய்துள்ளது. படம் வெளியாகி இரண்டே நாட்களில் வெளிநாடுகளில் எதிர்பார்த்ததை விட அதிகளவிலே படம் வசூல் செய்துள்ளது. இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்