நடிகர் விஜய்யுடன் பணிபுரியும் தனது திட்டம் பற்றி சக நடிகரும், அவரின் நண்பருமான விக்ரம் மனம் திறந்து பதிலளித்துள்ளார். 

Continues below advertisement

Continues below advertisement

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் மகான் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் கோப்ரா படத்தில் விக்ரம் 9 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.  2 முறை படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போன நிலையில்  கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாகியிருந்தது. முதல் நாள் பார்த்த ரசிகர்கள்  3 மணி நேரம் கோப்ரா படம் ஓடுவதால் இதனை ஒரு குறையாக குறிப்பிட்டு கலவையான விமர்சனத்தை முன் வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு 20 நிமிட காட்சிகளை நீக்குவதாக அறிவித்தது. 

இதனிடையே சில தினங்களுக்கு முன் ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய விக்ரமிடம், விஜய்யுடன் பணிபுரிவது குறித்து கேட்கப்பட்டது. சினிமாவில் விஜய்யின் நெருங்கிய நண்பராக வலம் வரும் விக்ரம், பல இடங்களில் நட்பை வெளிப்படுத்தும் வகையில் இருவரும் நடந்துள்ளனர். இந்நிலையில் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு படம் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். இதனைப் பார்த்த இயக்குநர் அஜய் ஞானமுத்து நீங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தைப் பார்க்க டிக்கெட் வாங்கும் முதல் ரசிகன் நான்தான் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ