நடிகர் கமல் நடிப்பில் வெளியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் 165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


நடிகர்கள் கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரது நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம்  ‘விக்ரம்’. மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கும் இந்தப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.






165 கோடி வசூல் 


வசூலிலும் பல சாதனைகளை படைத்துவரும்  ‘விக்ரம்’ முதல் வாரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெற்றிகரமாக ஓடி 140.30 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த வசூலின் மூலம் முதல்வாரத்தில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் விக்ரம் 2 ஆம் இடத்தை பிடித்ததோடு விஜய் நடித்த பிகில் படத்தின் முதல்வார வசூலையும் முறியடித்து இருக்கிறது. முதலிடத்தில் ரஜினியின் 2.0 படம் இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி விக்ரம் திரைப்படம் உலக அளவில் தோராயமாக 165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மட்டும் முதல்வாரத்தில் விக்ரம் திரைப்படம் 98 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.


வசூல் விவரங்கள்:


வெள்ளி – 34.25 கோடி


சனி – 32 கோடி


ஞாயிறு – 35 கோடி


திங்கள் -  19.25 கோடி


செவ்வாய் – 17.25கோடி


புதன் – 15கோடி


வியாழன் – 11.75 கோடி


மொத்தம் -165 கோடி (தோராயமாக)