லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என பெரிய பட்டாளமே நடித்துள்ள மல்டி வெர்ஸ் வகையறா படம் தான் விக்ரம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் வெற்றியை அங்கீகரித்து, லோகேஷ் கனகராஜூக்கு புதிய ஆடி காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றையும் கமல்ஹாசன் பரிசாக அளித்தார். திரையரங்குகளைத் தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூலை 8ம் தேதி வெளியானது. ஓடிடியிலும் விக்ரம் படம் சக்கைப்போடு போட்டது.


விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் எங்கோ சென்றுவிட்டது. ஏற்கெனவே மாஸ்டரில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்த விஜய், இப்போது வம்சி படத்தை முடித்துவிட்டு மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணையவிருக்கிறார்.


இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து திரையிடும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மேலும், நேற்றோடு விக்ரம் படம் வெளியாகி 50 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வசூலிலும் சரி, ரசிகர்களின் மனதையும் சரி இன்னும் வேட்டையாடி கொண்டுதான் இருக்கிறது. 










விக்ரம் திரைப்படத்தின் 50 வது நாளாய் கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இண்டர்நேசனல் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அந்த போஸ்டரும் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. 






முன்னதாக படத்தின் சண்டை காட்சி மேகிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்தப்படத்தில் அன்பறிவு என்ற இரட்டை சகோதரர்கள்  சண்டை இயக்குநர்களாக பணியாற்றியதும் அதில் அவர்கள் இருவரின் உழைப்பும் காட்டப்பட்டது. அந்த வீடியோ சில நாட்கள் சோசியல் மீடியாக்களை ஆட்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண