தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன்-1, கோப்ரா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ளது. சீயான் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விக்ரம், படத்திற்காக எப்பேர்ப்பட்ட தியாகத்தையும் செய்ய துணிபவர். அதற்கு உதாரணமாக சேது, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற படங்களை சொல்லலாம். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கோப்ரா ஆடியோ வெளியிட்டு விழாவில் நான் எப்பவும் சினிமாவுக்காகவே வாழ்வேன். சினிமாவே எனது உயிர் என உருக்கமாக தனது ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் நடிகர் விக்ரம் இன்று ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை போட தொடங்கியுள்ளார். அதில் அவர் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நான் தான் உங்க விக்ரம் மாறு வேடத்தில் வரவில்லை. இது பா.ரஞ்சித் படத்திற்காக இந்த கெட் அப் உடன் இருக்கிறேன். ட்விட்டருக்கு வந்தால் ரசிகர்களுக்கு நாம் நினைப்பதை எளிதாக தெரிவிக்கலாம் என்று கூறினார்கள். அதைக் கேட்டு நான் மிகவும் தாமதமாக ட்விட்டரில் வந்து இணைந்துள்ளேன்.


 






இங்கு இனிமேல் அடிக்கடி பதிவுகளை செய்ய உள்ளேன். ரசிகர்களை அன்பை இங்கு பெற்று கொள்ள நானும் இதில் களமிறங்கியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.


கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாகவும், ஹீரோயின்களாக ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் படத்தில் ஒரு மனம் பாடலும், டீசரும் வெளியானது. இப்படம் ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் படப்பிடிப்பானது நிதி நெருக்கடி காரணமாக நின்று போனது.


 






அதன்பின் விக்ரம் ஸ்கெட்ச், சாமி-2, கடாரம் கொண்டான், ஆதித்ய வர்மா, மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து முடித்து விடார். கௌதம் மேனனும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, ஓடிடி தளங்களுக்கான படங்கள் என பிசியாகி விட்டார். இதனால் துருவ நட்சத்திரம் படம் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.


அண்மையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாக அந்தப்படத்தின் இயக்குநர் கெளதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண