லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படம் நேற்று  அதிகாலை வெளியானது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் ஆக்‌ஷன் படம் வெளியாவதால் மொத்த தென்னிந்திய திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. அத்துடன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள் நேற்று  அதிகாலை முதலே சிறப்பான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தியேட்டர் முன்பு ரசிகர்கள் கூடி ஒரே ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியுடன் படத்தை வரவேற்றனர். 


மேலும்,  விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பதிவு செய்துள்ளது. இப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ஃபஹத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்கு கமல்ஹாசனுக்கு சமமான முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  படம் தொடக்கம் முதலே க்ரைம் அடிப்படையாகக் கொண்டு தொடங்குகிறது.  கமல்ஹாசன் ஓய்வு பெற்ற காவலராக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்.


கடந்த மூன்று வருடங்களாக வெள்ளித்திரையில் இல்லாமல் இருந்த கமல்ஹாசனுக்கு முதல்முறையாக இப்படம் ரிலீஸுக்கு முன்னரே பெரும் வசூலை ஈட்டியது. பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கமல்ஹாசன் தற்போது ஒரு நல்ல வெற்றியைப் பதிவு செய்துள்ளார். 


விக்ரம் திரைப்படம் திரையிடுவதற்கு முன்னதாகவே வசூலில் சாதனை படைத்தது. இந்தநிலையில், விக்ரமின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலை இங்கே பார்க்கலாம்.






விக்ரம் முதல் நாள் வசூல் :


தமிழ்நாடு - ரூ 20 கோடி 


உலகம் முழுவதும் - ரூ 45 கோடி 


விக்ரம் எப்படி இருக்கிறது..? 



 


விரைவில் விக்ரம் திரைப்படம் 100 கோடியை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஓப்பனிங் திரைப்படங்களின் பட்டியலில் விக்ரம் 3வது இடத்தில் உள்ளது. 










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண